192மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

தவம்  -  பெரியதவத்தாலுண்டாகும்  அரசையும்,  திருந்துமாற்றம்  -
திருத்தமாகிய   சொல்லையும்,  (அதாவது  : ஞானசாஸ்திரத்தையும்),
சிறப்புடை  -  மேன்மையுடைய, குலம் - குலத்தையும், நல்யாக்கை -
நல்ல  இலக்ஷணம்  நிறைந்த  சரீரத்தையும், செறிவித்த  - ஒருவனை
அடைவித்த,   செழும்   -   செழுமை   பொருந்திய,  தவத்தை  -
(ஸம்மியத்துவத்துடன் கூடிப் புண்ணியத்திற்கும் ஹேதுவாகிய) தபஸை,
மறப்பனேல்   -   அவன்   மறந்து   அஞ்ஞானத்துடன்   சேர்ந்து
மோஹனீயோதய  பாவத்தில் வர்த்திப்பானேயானால், (அது), மாற்றை
ஆக்கும்  -  ஸம்ஸாரத்தை  உண்டுபண்ணும்,  (அப்படி  உண்டான
ஸம்ஸாரத்திலும்),   இவையும்   -    (இங்குக்   கூறிய  புண்ணியப்
பலன்களாகிய)  மனித  சரீர  மாதியானவைகளும்,  வந்து அணுகா -
வந்து  சேரமாட்டா,  என்று  -  என்று  விளக்கி, திறத்துளி - இந்த
ஸம்ஸார தத்காரண மோக்ஷ தத்காரணங்களின் விதத்தை,  தெரிந்து -
அறிந்து,  திங்கள்  நாமற்கு .   (தன் தம்பியாகிய) பூரணசந்திரனுக்கு,
தெரிய - (லௌகீக  வைதீக  விஷயங்களாகிய  நிச்சய  வியவகாரப்
பகுதிகள்) தெரியும்படி, சொன்னான் - (அவ்வரசன்) கூறினான்,எ-று.

    ?திறத்துளி?    என்பதில்    உளி  - ஏழனுருபு; திறத்தினிடத்தை
(அதாவது : திறத்தை) என விரிக்கவேண்டும். (60)

 417. முன்னஞ்செய் தவத்தின் வந்து முடிந்தநற் பயத்தைக் கண்டாற்
    பின்னுமத் தவத்தைச் செய்து பெரும்பய னுகர்ந்தி டாதே
    மின்னஞ்சு நுசுப்பினார்தம் வேட்கையின் வீழ்ந்து போகும்
    வன்னெஞ்சற் கில்லை கண்டாய் மாற்றிடைச் சுகமு மென்றான்.

    (இ-ள்.)   (அவ்வாறு  கூறிப்  பின்னரும்)  முன்னஞ்  செய்  -
பூர்வத்தில் செய்யப்பட்ட,  தவத்தின் - தவத்தினால், வந்து முடிந்த -
வந்து கைகூடிய,  நற்பயத்தை - நன்மையாகிய புண்ணிய பலன்களை,
கண்டால் -  அனுபவமாகப்  பார்த்தால், (  அஃதிவ்வாறு  சுகத்தைக்
கொடுக்கக்கூடியதா யிருக்கிறதென்று மகிழ்ந்து) பின்னும் - மறுபடியும்,
அத்தவத்தை -  அந்தத்  தவத்தை, செய்து - இயற்றி, பெரும்பயன் -
பெரிதாகிய  அப்பியுதய   நைஸ்ரீயஸபலன்களை,   நுகர்ந்திடாது  -
அனுபவிக்காமல்,      ( தான்   அத்தவப்பயனை    அனுபவமாகப்
பார்த்திருந்தும்  அதைவிட்டு)   மின்  அஞ்சும் -  மின்னற்கொடியும்
(பார்த்து நாம்  உருவத்தில்  இதற்கு நிகராகமாட்டோம் என்று நாணி)
அஞ்சுகின்ற,  நுசுப்பினார்தம்   -   இடையையுடைய   மாதர்களின்,
வேட்கையின்       -     காமவிருப்பத்தில்,   வீழ்ந்துபோகும்   -
மூழ்கியிறந்துபோகின்ற, வன்நெஞ்சற்கு - (கொடுமையாகிய மோஹனீய பரிணாமமுடைய) கடினநெஞ்சையுடையவனுக்கு, மாற்றிடை -முத்திக்கு
மாற்றமாகிய இந்த ஸம்ஸாரத்தில், சுகமும் -  புண்ணியப் பகுதியாகிய
சுகங்களும்,  இல்லை  -  உண்டாவதில்லை,  என்றான்  -  என்றும்
கூறினான், எ-று. கண்டாய் - அசை. (61)