பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 193


Meru Mandirapuranam
 

 418. அருந்தவந் தானஞ் சீல மறிவனற் சிறப்பி வற்றாற்
     றிருந்திய மனத்தி னாரைத் திருவென்றும் பிரிதல் செல்லாள்
     பொருந்தியே நிற்கும் பூமி புகழொடுங் கீர்த்தி போகிப்
     பரந்தென்று மவர்க ணீங்கா பகைவரும் பணிவர் கண்டாய்.

   (இ-ள்.)   (அங்ஙனமுரைத்து  மேலும்)  அருந்தவம் - அரிதாகிய
தபஸும், தானம் - நால்வகைத்தானங்களும், சீலம் - சீலாசார முதலிய
விரதங்களும்,   அறிவன்   நற்சிறப்பு   -   கேவல   ஞானமுடைய
அருகத்பரமேஷ்டிக்குச்  சிறப்புச் செய்தல் என்னும் பூஜாபரிணாமமும்,
(ஆகிய)   இவற்றால்  -  இவைகளால், திருந்திய  -  திருத்தமாகிய,
மனத்தினாரை -  மனதையுடைய புண்ணிய பரிணாமமுடையவர்களை,
திரு  -  இலக்குமி, என்றும்  - எப்பொழுதும்,  பிரிதல் செல்லாள் -
நீங்கமாட்டாள்,  பொருந்தியே  நிற்கும் -  அவர்களிடத்துச்  சேர்ந்து
நிலை  பெற்றேயிருப்பாள்,அவர் கண் - அப்படிப்பட்ட சுபப்பரிணாம
முடையவரிடத்தே,  கீர்த்தி போகிப் பறந்து -  கீர்த்தியானது எங்கும்
போய்ப்பரவ,  புகழொடும் -  அந்தக்கீர்த்தியும்,  பூமி - இந்தப் பூமி
ராஜ்ஜியமும்,  என்றும்  -  எப்பொழுதும்,  நீங்கா  -  நீங்கமாட்டா,
பகைவரும் - சத்துருக்களும், பணிவர் - வணங்குவார்கள், எ-று. (62)

 419. வேட்கையும் வெகுளி தானும் வெஞ்சொலு மஞ்சொ லார்மேற்
     றாட்சியு முதல மன்னர்த் திருவினைத் தவறு செய்யும்
     சூட்சியும் பெருமை தானு முயற்சியு மமைச்சு மாதி
     மாட்சியைச் செய்து மன்னர் செல்வத்தை வளர்க்கு மென்றான்.

    (இ-ள்.)     வேட்கையும்    -    வியவஹாரப்     பழுதாகிய
அத்தியாசையும்,  வெகுளிதானும்  -  கோபமும்,   வெஞ்சொலும்  -
கடுஞ்சொல்லும்,    அம்    -     அழகிய,    சொல்லார்  மேல் -
சொற்களையுடைய  ஸ்திரீகளின்  மேல், தாட்சியும் - மோகத்தினாலே
அவர்களிடத்து  வணக்கங்காட்டுதலும், முதல் - முதலிய செய்கைகள்,
மன்னர் - அரசர்களுடைய, திருவினை - ஐசுவரியத்தை, தவறுசெய்யும்
-     கெடுத்துவிடும்,      சூட்சியும்  - (  மேற்சொன்ன   கெட்ட
குணங்களினின்றும் நீங்கும்) உபாயமும்,  பெருமை தானும் - உயர்ந்த
நற்குணமும்,   முயற்சியும்   -   விடாமுயற்சியும்,   அமைச்சும்   -
மந்திராலோசனையும், ஆதி - முதலானவைகள், மாட்சியைச் செய்து-
அழகைச் செய்து, மன்னர் செல்வத்தை -இராஜாக்களுடைய சம்பத்தை,
வளர்க்கும்   - விருத்தியடையச்  செய்யும்,   என்றான்  -  என்றும்
சொன்னான்,  எ-று. (63)

 420. இனையன பலவுஞ் சொல்லி யெழின்முடி தம்பிக் கீந்து
     கனைகழ லரசர் சூழக் காவலன் போகி யந்த
     முனிவரன் சரண மூழ்கி முடிமுதற் றுறந்து நின்றான்
     சினைமிசை யணியை நீத்த செறிந்தகற் பகத்தை யொத்தான்.