(இ-ள்.) இனையன - இத்தன்மையனவாகிய, பலவும் - பல
நீதிகளையும், சொல்லி - உரைத்து, (பின்னர்), எழில் - அழகு
பொருந்திய, முடி - இராஜபட்டாபிஷேக கிரீடத்தை, தம்பிக்கு -
தம்பியான பூரணசந்திரனுக்கு, ஈந்து - கொடுத்து, கனை -
சப்தியாநின்ற, கழல் - வீரகண்டையை அணிந்த, அரசர் -
இராஜாக்கள், சூழ - தன்னைச் சூழும்படியாக, காவலன் -
சிம்மச்சந்திரவாசன், போகி - போய், அந்தமுனிவரன் - முன்பு
தனக்குத் தர்மஞ் சொன்ன அந்தப் பூரணசந்திர முனிவரது, சரணம்
மூழ்கி - பாதத்திற் படிந்து, முடி முதல் - சிகைமுதலாகப் பல
அணிகளையும், துறந்து - விதியின்படி பரிகரித்து, நின்றான் - தீக்ஷை
கைக்கொண்டு நின்றவனாய், சினைமிசை - கிளைகளின் மேலுள்ள,
அணியை - ஆபரணாதிகளை, நீத்த - நீக்கிய, செறிந்த -
கிளையடர்ந்த, கற்பகத்தை - கற்பக விருக்ஷத்தை, ஒத்தான் -
நிகர்த்தான், எ-று. (64)
421. பணமிசை மணிதோல் நஞ்சு பரிந்ததோர் பணியைப் போல
மணிமுடி யாடை குஞ்சி மனத்திடை மாசு நீக்கிக்
குணமணி யிலக்க மெண்பத் தீரிரண் டணிந்து கோமான்
பணிவினாஞ் சீல மாலை பதினெண்ணா யிரந் தரித்தான்.
(இ-ள்.) (அவ்வாறு தவத்திற் சென்ற அவன்) பணமிசை -
பணாமுடியின் மேலுள்ள, மணி - இரத்தினத்தையும், தோல் -
உடம்பிலுள்ள சட்டையையும், நஞ்சு - பற்களிலுள்ள விஷத்தையும்,
பரிந்தது - விட்டு நீங்கியதாகிய, ஓர் - ஒரு, பணியைப்போல -
சர்ப்பத்தைப்போல, மணிமுடி - இரத்தின கிரீடத்தையும், ஆடை -
வஸ்திரத்தையும், குஞ்சி - மயிர் முடியையும், மனத்திடை -
மனத்திலுண்டாகிய, மாசு - அப்பியந்தரப் பற்றுக்களையும், நீக்கி -
பரிகரித்து, எண்பத்தீரிரண்டு இலக்கம் -எண்பத்து நான்கு லக்ஷமாகிய,
குணம்மணி - குணவிரதங்ளென்னும் இரத்தினங்களை, அணிந்து -
தரித்து, கோமான் - சர்வக்ஞனாகிய இறைவனது, பணிவினாம் -
வணக்கத்தினாலுண்டாகின்ற, பதினெண்ணாயிரம் -
பதினெண்ணாயிரமாகிய, சீலமாலை - சீலாசாரமென்னும்
மாலைகளையும், தரித்தான் - அணிந்தான்,
எ-று. (65)
422. தயாவெனுந் தைய லாளைச் சாலவுஞ் செறிந்து தன்க
ணுசாவெனு முறுதித் தோழ னுடன்புணர்ந் துறக்க மென்னு
மயால்செய்யு மடந்தை தன்னை மனத்தகத்தகற்றி மாண்பி
னயாவுயிர்த் திருக்கை வைத்தா னருந்தவக் கொடியை யண்ணல்.
(இ-ள்.) தயாவெனும் - ஜீவதயவென்கிற, தையலாளை - மாதை,
சாலவும் - மிகவும், செறிந்து - அடைந்து, தன்கண் -
தன்னிடத்தேயுள்ள, உசாவெனும் - ஆராய்தலென்கிற, உறுதி -
உறுதியாகிய, தோழனுடன் - சிநேக
|