பாண்டம் என்பனவாம்; இவற்றில் ஹிரண்ணியம், ஸ்வர்ணம் என்பவை
இரண்டும் ஒரு பொருளையே குறிப்பினும் இங்கு இரண்டாக
விவரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் விவரத்தை சுகபோதையென்னும்
நூலில் சப்தமாதிகாரத்தில் இருபத்தொன்பதாவது சூத்திர வியாக்கியானத்தால் தெரிந்துகொள்க. (78)
435. அடக்கமீ ராறுஞ் சிந்தை யாறிரண் டோடு மொன்றித்
துடிப்பறப் பரிசை வெல்லுந் தோன்றிய வொழுக்கந் தன்னால்
தடுப்பின்றி யுலக மூன்றிற் றன்னெல்லை விரியும் போழ்தும்
வடுப்படா விபுல மென்னும் மனப்பரி யத்தைப் பெற்றான்.
(இ-ள்.) (அதன் மேல்) அடக்கம் ஈராறும் - பிராணி சம்யமம்
விஷயசம்யம மாகிய பன்னிரண்டும், சிந்தை ஆறிரண்டோடும் -
துவாதசானுப்பிரேக்ஷையும் ஆகிய இவற்றோடும், ஒன்றி - பொருந்தி,
தோன்றிய - உண்டாகிய, துடிப்பற - சலனமானது நீங்க, பரிசை -
பரீஷகங்களை, வெல்லும் - ஜெயிக்கும்படியான, ஒழுக்கந்தன்னால் -
சம்யக்சாரித்ர பலத்தினால், தடுப்பின்றி - தடையில்லாமல், உலகம்
மூன்றில் - இம்மூன்றுலகத்தில், தன்னெல்லை - தனக்குண்டாகிய
அளவு, விரியும் போழ்தும் - விசாலிக்கின்ற காலத்திலும், வடுப்படா -
குற்றமடையாத, விபுலமென்னும் - விபுலமதியென்னும், மனப்பரியத்தை
- மனப்பரியஞானத்தை, பெற்றான் - அடைந்தான், எ-று.
சம்யக்ஞான
பஞ்சகத்தில் மனப்பரியஞானமும் ஒன்று, இந்த ஞானங்களின்
விவரங்கள் பதார்த்தசாரத்தில் ஞானாதிகாரத்திலும்,
உபயோகாதிகாரத்திலும், தத்துவார்த்த சூத்திர வியாக்யானமாகிய
சர்வார்த்தசித்தி, சுகபோதை முதலியவைதளில் பிரதமாத்தியாயத்திலும்
விரிவாகவும், இம்மேருமந்தர புராணம் பதின்மூன்றாவது சருக்கத்தில்
சுருக்கமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றைப்
பார்த்துக்கொள்க. (79)
436. சீரணி யடக்கஞ் செய்தோர் பற்றற்றா காயஞ் செல்லுஞ்
சாரணத் தன்மை பெற்று மாதவன் சரிக்கு நாளுட்
போரணி யானை வேந்தன் பூரசந் திரன்றன் சிந்தை
வாரணி முலையி னார்தம் வசஞ்சென்று மயங்கு நின்றே.
(இ-ள்.) (மேற்கூறியவற்றை யெல்லாம் அடைந்ததோடு) சீரணி -
சிறந்த அழகையுடைய, அடக்கம் செய்து - ஈராறடக்கங்களைப்
பொருந்தி, ஓர் - ஒப்பற்ற (அதாவது பெரிய), பற்றற்று - பற்று நீங்கி,
(அதாவது : யாதொரு பரிக்கிரகத்திலும் பற்றில்லாமல்
நிஸ்ஸங்கத்துவனாகி ), ஆகாயஞ்செல்லும் - ஆகாயஞ்செல்லும்
படியான,
சாரணத்தன்மை - ஆகாய
சாரணத்துவமென்கிறரித்தியை,
பெற்று - அடைந்து, மாதவன் - மஹாதபஸையுடைய இச்சிம்மச்சந்திரமுனிவன்,
|