சரிக்கும் நாளுள் - சஞ்சரிக்கின்ற நாட்களில், போர் - போர்
செய்யக்கூடிய, அணி - அழகிய, யானை - யானையையுடைய,
வேந்தன் - அரசனாகிய, பூரசந்திரன்றன் - பூரணசந்திரனுடைய,
சிந்தை - மனமானது, வாரணி - இரவிக்கையை அணிகின்ற, முலையினார்தம் - ஸ்தனங்களையுடைய ஸ்திரீமார்களின், வசம்சென்று
- வசத்திற்போய், நின்று - நிலைபெற்று, மயங்கும் -
மயங்குவதாயிருந்தது, எ-று. (80)
437. இசையின்மே லசுண மாவு மிளையவர் முலையி னின்பப்
பசையின்மா சுணமுங் கண்ணின் புலங்களிற் பறந்து வந்து
விசையினால் விளக்கின் வீழும் விட்டிலும் போன்று வேந்தன்
இசையுநா ளிராம தத்தை முனியைவந் திறைஞ்சி னாளே.
(இ-ள்.) இசையின்மேல் - சங்கீதத்தின்மேல், அசுணமாவும் -
கேகயபக்ஷியும், இளையவர் - இளமைப்பருவத்தையுடைய ஸ்திரீகளின்,
முலையின் - ஸ்தனங்களிலுண்டாகும், இன்பப்பசையில் - சுகப்பற்றில்,
மாசுணமும் - ஸர்ப்பமும், கண்ணின்புலங்களில் - நேத்திரேந்திரிய
விஷயங்களில், பறந்துவந்து - பறத்தலாகி வந்து, விசையினால் -
வேகத்தினால், விளக்கின்வீழும் - தீபத்தில் வீழ்கின்ற, விட்டிலும் -
விட்டிற்பூச்சியும், (பற்றுவைத்திருப்பதை) போன்று - நிகர்த்து,வேந்தன்
- பூர்ணச்சந்திரவாசன், இசையும் நாள் - (அவ்வாறு) ஸ்திரீகளின் இச்சையில் பொருந்தியிருக்கின்ற காலத்தில், இராமதத்தை -
இராமதத்தாரியாங்கனை, வந்து - வந்து சேர்ந்து, முனியை -
சிம்மச்சந்திர மகாமுனியை, இறைஞ்சினாள் - வணங்கினாள், எ-று.
(81)
438. புடையவர் மெலியப் பொங்குங் கடையவர் செல்வம் போல
இடையது மெலிய வீங்கி யெழுந்திணைந் திருந்த கொங்கை
கடையவ ரிட ருறத்தங் கீழடி யடைய தேபோல்
இடையடி யடையக் கண்டு துறந்தவெம் மிறைவ போற்றி.
(இ-ள்.) (அவ்வாறு வணங்கியவள் அம்முனியை நோக்கி)
புடையவர் - பக்கத்திலுள்ள பெரியோர், மெலிய - மெலிவையடைய,
பொங்கும் - (அதனால்) அதிகரிக்கும், கடையவர் - தாழ்ந்தகுணமுடையவர்களுடைய, செல்வம்போல -
செல்வத்தைப்போல, இடையது - இடுப்பானது, மெலிய - மெலியும்படி
(அதாவது : தளரும்படி), வீங்கி - பருத்து, எழுந்து - மார்பினிடமாக
வுண்டாகி, இணைந்திருந்த - இரட்டையாகச் சேர்ந்திருந்த, கொங்கை
- தனங்கள், கடையவர் - மேற்கூறிய கீழ்மக்கள், இடருற -
கேடடைய, தம்கீழ் - அப்போது அந்தப் பெரியோர் தங்களின்
கீழுள்ள, அடி - பாதத்தில், அடைவதேபோல் - சரணமாகச்
சேர்வதைப்போல, இடையடி - இடையினது அடியில், அடையக்கண்டு
- சேரப்பார்த்து, (பெண்களின் பெருமிதம் இவ்வளவுதான் என்று
வெறுத்து வைராக்கிய
|