204மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

முற்று),  துறந்த  - ஸம்ஸார  வாழ்வை நீத்த, எம் இறைவ - எங்கள்
சுவாமியே!, போற்றி - உன்னைத் துதிக்கின்றேன், எ-று. (82)

 439. காம்பெனத் திரண்டு மைந்த ருள்ளத்தைக் கனற்று மென்றோன்
     பாம்பின துரியைப் போலப் பசையற்றுத் திரையக் கண்டுந்
     தேம்பலில் மொழியி னார்தந் திறத்துளி வெறுத்துப் போந்து
     காம்புடை யடவி சேர்ந்த காவல பாதம் போற்றி.

   (இ-ள்.)    காம்பென    -    மூங்கிலைப்போல,    திரண்டு -
திரட்சிபொருந்தி,  மைந்தர்  -  விடபுருஷர்களுடைய,  உள்ளத்தை -
மனதை,  கனற்றும் -  விருப்பத்தால், வெதும்பச் செய்கின்ற, மென் -
மிருதுவாகிய,   தோள்  -   ஸ்திரீகளின்  தோள்கள்,  பாம்பினது -
பாம்பினுடைய,  உரியைப்போல -   சட்டையைப்போல, பசையற்று -
இரத்தப்பற்றற்று,  திரைய  -  பின்னே திரைதலையடைய, கண்டும் -
பார்த்தும்,   தேம்பலில்   -   வாடுதலில்லாத,    மொழியினார்தம் -
வார்த்தைகளையுடைய  அந்த  ஸ்திரீகளினது,   திறந்து - நிலையற்ற
வனப்பின் விதத்தில், உள்ளி - நினைத்து,   வெறுத்து - விராகமுற்று,
போந்து -  அவர்  கூட்டுறவை  விட்டு  நீங்கி வந்து,  காம்புடை -
மூங்கில்களை  மிகுதியாகவுடைய,  அடவி  -  காட்டில்,  சேர்ந்த -
அடைந்து  தவஞ்  செய்கின்ற,  காவல  -   ரக்ஷகனே!,   பாதம் -
உன்னுடைய அடிகளை, போற்றி - துதிக்கின்றேன், எ-று.

கண்டும் என்பதிலுள்ள உம்மை - இறந்தது தழுவிய எச்சப்பொருளது.
                                        (83)

 440. பெரியவர் பாதஞ் சேர்ந்த பேதையர் சிந்தை போலக்
     கரியமென் கூந்தல் காலத் தாற்கறுப் பொழியக் கண்டும்
     புரவலர் செல்வம் பார்க்கிற் புற்புதம் போலு மென்றும்
     மருவிய வரசு நீத்த மாதவ பாதம் போற்றி.

    (இ-ள்.)  பெரியவர் -  ஞானவந்தர்களுடைய, பாதம் - அடியை,
சேர்ந்த  -   அடைந்த,    பேதையர்  -  அறிவில்லாதவர்களுடைய,
சிந்தைபோல   -   மனதைப்போல,   (அதாவது :   அம்மனமானது
பரிசுத்தமாவது   போல),   கரிய -   கறுப்புநிறமுள்ள,   கூந்தல்  -
அளகமானது,  காலத்தால்  -  கால  முதிர்ச்சியின்   சேர்க்கையால்,
கறுப்பொழிய  -     தனது  கருமை  நிறம்   நீங்க,   கண்டும்   -
அதனைப்பார்த்தும், பார்க்கின் - ஆராயுமிடத்து, புரவலர் செல்வம் -
இராஜாக்களுடைய ஐசுவரியமும், புற்புதம்போலும் -    நீர்க்குமிழியை
நிகர்க்கும், என்றும் - என்று நினைத்துச்   செல்வம்  நிலையாமையை
அறிந்தும்,  மருவிய  -  சேர்ந்திருந்த,  அரசு - இராஜஐசுவரியத்தை,
நீத்த  -  விட்டுத்  தவங்  கைக்கொண்ட,  மா -  சிறந்த,    தவ -
தவத்தையுடைய  ஸ்வாமியே!,  பாதம் - உன் அடிகளுக்கு,  போற்றி,
ஸ்துதி செய்கின்றேன், (என்று பலவாறு துதித்தனள்), எ-று. (84)