441. ஏத்தருங் குணனை யிவ்வா றேத்திய விராம தத்தை
பார்த்தறம் பகரக் கேட்டுப் பணிந்தன ளிருந்து பின்னும்
வார்த்தையுண் டிறைவ கேளுன் மாதவத் திடையூ றேனும்
பாத்திபக் குமரன் பால தெனமுனி பகர்க வென்றான்.
(இ-ள்.) ஏத்தரும் - துதித்தற் கருமையாகிய, குணணை -
ஸம்மியக் குணத்தையுடைய ஸிம்மச்சந்திர முனிவரனை, இவ்வாறு -
இந்தப் பிரகாரம், ஏத்திய - துதித்த, ராமதத்தை -
இராமதத்தையானவள், பார்த்து - அம்முனிவன் தன்னைப்பார்த்து,
அறம் - தர்மத்தை, பகர - சொல்ல, கேட்டு - கேட்டறிந்து,
பணிந்தனள் - அவனை மீண்டும் வணங்கியவளாய், இருந்து -
அவன் சமீபத்திலுட்கார்ந்து, பின்னும் - மேலும் (அவனை நோக்கி,
இறைவ சுவாமி!, பார்த்திபகுமரன் பாலது - இராஜ குமாரனாகிய
பூரணசந்திரனிடத்தைச் சார்ந்ததாகிய, வார்த்தை - சில மொழிகள்,
உண்டு - இருக்கின்றன, (அவற்றைக் கேட்பது) உன் மாதவத்து -
உன்னுடைய சிறந்த தபஸினது, இடையூறேனும் - விக்கினமாயிருந்த
போதிலும், கேள் - கேட்பாயாக, என - என்று சொல்ல, முனி -
அம்முனிவன் (அவளை நோக்கி), பகர்க - அம்மொழிகளைச்
சொல்வாயாக, என்றான் - என்று உரைத்தான், எ-று. (85)
442. மங்கலத் தொழில்கள் முற்றி மணிமுடி கவித்து வந்து
திங்கள்வெண் குடையி னீழற் சீயவா சனத் திருந்தான்
பொங்குசா மரைகள் வீசப் பொன்மலைக் குவடு தன்னிற்
சிங்கவே றிருந்த தொத்தான் சீயமா சேனன் மைந்தன்.
(இ-ள்.) (அப்போது இராமதத்தை அம்முனிவரனை நோக்கி)
சீயமாசேனன் - சிம்மச்சந்திர மகாராஜனுடைய, மைந்தன் -
குமாரனாகிய பூரணசந்திரன், மங்கலத்தொழில்கள் - அரசர்களுக்குத்
தினந்தோறும் உண்டாகிய மங்கல காரியங்களை, முற்றி - முடித்து,
மணிமுடி - இரத்தின கிரீடத்தை, கவித்து - சிரசிற்சூட்டி, வந்து -
கொலுமண்டபத்திற்கு வந்து சேர்ந்து, திங்கள் - சந்திரன் போன்ற,
வெண்குடையின் -வெள்ளைக் குடையினது, நீழல் - நிழலில், பொங்கு
- அதிகரிக்கின்ற, சாமரைகள் - சாமரைகளை, வீச - வார
விலாஸனிகள்
வீச, சீய ஆசனத்து - சிங்காசனத்தின்மேல், இருந்தான்
- இருந்தவன்,
பொன்மலை - மஹா மேரு பர்வதத்தினுடைய,
குவடுதன்னில் - சிகரத்தின்மேல்,சிங்கவேறு - ஒரு ஆண்சிங்கமானது, இருந்தது - இருந்ததை, ஒத்தான் - நிகர்த்தான், எ-று. (86)
443. இளஞ்சிங்க வேற்றைச் சூழ்ந்த விரும்புலிப் போத கம்போற்
களங்கண்டு முழங்கும் யானைக் காவல குமரர் சூழ்ந்தார்
|