208மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

செருவிடை    -    யுத்தரங்கத்தில்,   வெல்   -   சத்துருக்களைச்
செயிக்கும்படியான,     வலம்   -   வன்மைபொருந்திய, திறலும் -
பராக்கிரமமும், சிந்தைசெய் - மனதினால் நினைக்கின்ற, பொருளவை
- பொருளாகிய அவைகள், வருதலும் - வந்து சேர்வதும், போகமும்
- சுகானுபவமும், நல்ல - நன்மையாகிய, திருவுடை - லக்ஷணமுள்ள,
அறத்தது - ஸ்ரீஜிந தருமத்தினது, செய்கை - காரியமாகும், என்றனன்
- என்றும் யான் சொன்னேன், எ-று. (91)

 448. நிலத்திடை யங்குரம் வித்தை நீத்திலை
     மலைத்தலை மழையிலா தாறு தான்வரா
     புலத்திடை யின்பமு மில்லை புண்ணியந்
     தலைத்தலை வரச்செயா தவர்கட் கென்றனன்.

   (இ-ள்.)   (மேலும்)  நிலத்திடை -  இப்பூமியில், வித்தை நீத்து -
விதையை   நீக்கி,   அங்குரம்   -   முளையானது,     இல்லை -
உண்டாவதில்லை,  மலைத்தலை -  பர்வதத்தின்மேல், மழையிலாது -
மழைபெய்தல்  இல்லாமல்,  ஆறுதான்  - மலையருவியானது, வரா -
பெருகிவரமாட்டாது,    (இவற்றைப்போல),  புண்ணியம் -  புண்ணிய
ஹேதுவாகிய சம்யக்துவத்துடனே கூடிய விரதாதிகளை,  தலைத்தலை
- ஒவ்வோரிடத்திலும்,   வர  -   மேவும்படி,  செய்யாதவர்கட்கு  -
செய்யாதவர்களுக்கு,    புலத்திடை   யின்பமும்  -   பஞ்சேந்திரிய
விஷயங்களிலான  சம்ஸார  சுகமும்,  இல்லை  - உண்டாவதில்லை,
என்றனன் - என்றும் சொன்னேன், எ-று. (92)

 449. காரண மில்லையே லில்லை காரியம்
     போரணி வேலினாய் முன்செய் புண்ணியங்
     காரண மாகநீ ருடுத்த கன்னியுஞ்
     சீரணி செல்வமுஞ் செறிந்த வுன்னையே.

    (இ-ள்.)  (இவ்வாறு சொல்லிப்  பின்னர்)  காரணமில்லையேல் -
காரியத்திற்குக் காரணமாகிய  தன்மை  இல்லாவிட்டால்,   காரியம் -
அக்காரணத்தாலாகும் காரியம், இல்லை - உண்டாவதில்லை, போர் -
யுத்தத்தில்,  அணி -  அழகு  பொருந்திய  (அதாவது : வெற்றியழகு
பெற்ற),  வேலினாய் -  வேலாயுதத்தையுடைய  குமரனே!,  முன்  -
பூர்வத்தில்,    செய்  -  உன்னால்  செய்யப்பட்ட,  புண்ணியம்  -
புண்ணியமானது,  காரணமாக  -  ஹேதுவாக, நீருடுத்த கன்னியும் -
சமுத்திரஞ்சூழ்ந்த இப்பூமிதேவியும்  (அதாவது : பூமி ராஜ்யமும்), சீர்
அணி - சிறப்பைக் கொண்ட, செல்வமும் - இந்த ராஜ ஐஸ்வர்யமும்,
உன்னைச் செறிந்த -இப்போது அக்காரணத்தின் காரியமாக உன்னைச்
சேர்ந்திருக்கின்றன, எ-று. (93)

 450. மண்ணின்மேல் மற்றிந்தச் செல்வ மேல்வர
     வெண்ணிநீ புண்ணிய மீண்டச் செய்கெனப்