நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 211


 

ஐந்தாவது :

நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம்

454. வாசநின் றறாத சோலை மழையென மதுக்கள் பெய்து
     மூசுதேன் முழங்க மஞ்ஞை முகிலென வகவி முத்தின்
     றூசுலா மலங்க லார்போற் றொடங்கிய நடங்க ளோவாக்
     கோசலை யென்ப துண்டிக் குவலயம் புகழு நாடே.

     (இ-ள்.) வாசம் - பரிமளமானது,   நின்று  - வியாபித்து நின்று,
அறாத - பற்றாறாத, சோலை - தோப்புக்களில், மதுக்கள் - தேன்கள்,
மழையென  - மழையைப்போல, பெய்து - சொரிந்து, மூசும் - அதில்
மொய்த்திரா  நின்ற, தேன் - தேனீக் கூட்டங்கள், முழங்க - சப்திக்க,
(அம்முழக்கத்தை),    மஞ்ஞை   -    மயில்கள்,  முகிலென - மேக
கர்ஜனையென்று, (நினைத்து), அகவி - சிறகு விரித்தாடி, முத்தின் தூசு
- முன்றானையில்   முத்துக்கட்டி  நெய்யப்பட்டிருக்கும் வஸ்திரத்தை
அணிந்தவர்களும்,   உலாம்  -   மார்பில்   அணியப்பட்டசைகின்ற,
அலங்கலார்போல்   -    மாலையை         யணிந்தவர்களுமாகிய
நர்த்தனமாதர்கள்போல, தொடங்கிய - ஆரம்பிக்கப்பட்ட, நடங்கள் -
நடனங்கள்,   ஓவா   -   இடைவிடாததும் (அதாவது : நீங்காததும்),
இக்குவலயம்   -   இப்பூமியிலுள்ளவர்கள்,   புகழும்   -  புகழ்ந்து
கூறத்தக்கதும்,    கோசலை   என்பது    -      கௌசலையென்று
சொல்லக்கூடியதும்,  (ஆகிய)  நாடு  - ஒரு  தேசமானது, உண்டு -
உள்ளது, எ-று.                                           (1)

455. திருத்தகு நாடி தற்குத் திலதமாய்த் திகழ்ந்து சென்றார்
    வருத்தந்தீர் மாட மூதூர் மறையவ ருறையு மாண்ட
    விருத்தநற் கிராமந் தன்னுள் மிருகாயண னென்று மிக்கா
    னொருத்தனங் குளனற் சாந்தி யுருவுகொண் டனைய நீரான்.

     (இ-ள்.) திருத்தகும் - செல்வம் பொருந்திய, நாடு - தேசமாகிய,
இதற்கு- இந்தக் கோசல நாட்டுக்கு, திலதமாய் - நெற்றிப்பொட்டுக்குச்
சமானமாகி,  (அதாவது :  மிக அழகாகி),  திகழ்ந்து  -  பிரகாசித்து,
சென்றார்  - அதில்  அடைபவர்களது,  வருத்தம் - சிரமங்கள், தீர் -
நீங்கும்படியான,    மாடம்   -   உப்பரிகைகளையுடைய,   மூதூர் -
பழமையாகிய   ஊரானது,  மறையவர் - பிராம்மணர்கள், உறையும் -
தங்கியிராநின்ற,   மாண்ட   -   மாட்சிமையுடைய,   நல் - நன்மை
பொருந்திய,   விருத்தக்கிராமம்  -  விருத்த கிராமமாகும், தன்னுள் -
அதனுள்ளே,   மிருகாயணனென்று   -    ம்ருகாயணனென்று பெயர்
கூறப்பட்டு, மிக்கான் - பெரியோனாகிய