212மேருமந்தர புராணம்  


 

வனும்,   நற்சாந்தியுருவு  கொண்டனைய   நீரான்  -  நன்மையாகிய
க்ஷமையே  ஒரு  ரூபங்கொண்டு வந்ததை நிகர்த்த குணமுடையவனும்,
(ஆகிய),  ஒருத்தன்  -  ஒரு   பிராமணன், உளன் - உளனாயினான்
(அதாவது : இருந்தான்), எ-று.

     அங்கு - அசை.                                     (2)

456. அதிர்பட நடத்த லில்லா ளவன்மனைக் கிழத்தி யஞ்சொன்
     மதுரையென் றுரைக்கப் பட்டாள் மகளும்வா ருணியா முத்தின்
     கதிர்நகைக் கருங்கட் செவ்வாய்க் கால்பரந் தெழுந்து பொன்னின்
     பிதிர்பரந் திருந்த கொங்கைப் பிணையனா ளொருத்தி யானாள்.

     (இ-ள்.)   அதிர்பட  -  அதிர்ச்சிபடும்படி,  நடத்தலில்லாள் -
நடக்காதவளாகிய,     (அதாவது  :    மிருதுவான     நடையையும்
நற்குணத்தையுமுடையவளாகிய),      அவன்       மனைக்கிழத்தி -
அப்பிராமணன்    மனைவியானவள்,   அஞ்சொல்   -     அழகிய
மொழியைப்பேசும்,      மதுரையென்று     -       மதுரையென்று,
உரைக்கப்பட்டாள்    -     பெயர்   சொல்லப்பட்டவள், மகளும் -
அவளுக்குப்   புத்திரியும்,    வாருணியாம்   -    வாருணியென்னும்
பெயருடையவளாம், (அவன்), கதிர் - பிரகாசம் பொருந்திய,  முத்தின்
நக - முத்துக்களைப்போன்ற  பற்களையும், கரும் - கருத்த,   கண் -
கண்ணையும்,   செவ்வாய்  -   சிவந்த    வாயையும்,  கால்பரந்து -
அடிபரந்து, எழுந்த - மார்பிலுண்டாகிய, பொன்னின் - பொன்போலும்,
பிதிர்    பரந்திருந்த   -    தேமல்   படர்ந்திருந்த,    கொங்கை -
ஸ்தனங்களையும்,  (உடைய), பிணையனாள் - பெட்டைமான் போன்ற
பார்வை    பொருந்தியவளாய்,    ஒருத்தியானாள்   -     ஒப்பற்ற
அழகுடையவளானாள், எ-று.                               (3)

457. கதிர்மறை பொழுதிற் கான்ற கமலமுங் குவளை யும்போல்
    மதுரையும் மகளும் வாட மறையவன் மரித்துப் போகி
    யெதிர்வரு பிறவி யில்லா ரிடையறா வயோத்தி யாளு
    மதிபலன் றனக்குத் தேவி சுமதிக்கு மரிவை யானான்.

     (இ-ள்.)  கதிர்  - சூரியன்,  மறைபொழுதில் - அஸ்தமிக்கின்ற
காலத்தில்,   கான்ற   -   தோன்றிய,   (அதாவது :   முகம்சாம்பிக்
காணப்பட்ட),  கமலமும் - தாமரைப் புஷ்பமும், குவளையும்போல் -
குவளைப்    புஷ்பமும்போல,    மதுரையும்   -    (அப்பிராமணன்
பாரியாளாகிய) மதுரையும், மகளும் - புத்திரியாகிய வாருணியும், வாட
- வருத்தமடைய, மறையவன் - மிருகாயணனென்னும் அப்பிராமணன்,
மரித்துப்போகி   -   இறந்துபோய், எதிர்வரும் பிறவியில்லார் - இனி
வரக்கூடிய   பிறவியில்லாமல்   மோக்ஷமடைபவர்கள்,  இடையறா -
இடைவிடாமல்   பிறக்கும்படியான, அயோத்தி - அயோத்தியென்னும்
நகரத்தை,    ஆளும்    -   அரசாளும்,    அதிபலன்   தனக்கு -
அதிபலனென்னு மாசனுக்கும், தேவி - அவன் றேவியாகிய,