சுமதிக்கும் - ஸுமதியென்பவளுக்கும், அரிவையானான் - புத்திரியாக
அவதரித்தான், எ-று. (4)
458. இரணிய வதியென் பாள்பே ரிளமயி லனைய சாயல்
வரிசிலைப் புருவச் செவ்வாய் வல்லிதான் வளர்ந்த பின்னைத்
தரணிமே லரச ரெல்லாந் தையலைத் தருக வென்னச்
சுரமைநா டுடைய தோன்றற் றிண்புயந் துன்னு வித்தார்.
(இ-ள்.) பேர் இளமயில் அனைய - மிகுந்த இளமையுள்ள
மயிலை நிகர்த்த, சாயல் - சாயலையும், வரி நீண்ட (அல்லது
கட்டுக்களையுடைய), சிலை - வில்லுக்குச் சமானமாகிய, புருவம் -
புருவத்தையும், செவ்வாய் - சிவந்த வாயையுமுடைய, வல்லிதான் -
புஷ்பக் கொடிபோன்ற அக்குமாரியானவள், இரணியவதியென்பாள் -
இரணியவதியென்று பெயர் கூறப்பட்டவளாய், வளர்ந்தபின்னை -
வளர்ந்துயௌவன வயதை யடைந்தபிறகு, தரணிமேல் அரசரெல்லாம்
- இப்பூமியின்மேலிருக்கும் இராஜாக்களெல்லாம், தையலை -
இக்குமாரியை, தருகவென்ன - (மணஞ்செய்து) கொடுக்க
வேண்டுமென்று கேட்கவும், (இந்த இரணியவதியின் தாய்தந்தையர்
இவளை), சுரமை நாடுடைய - ஸுரம்மிய தேசத்தைச்
சொந்தமாகவுடைய, தோன்றல் - பெருமையிற் சிறந்த
பௌதனபுராதிபதியான பூரணசந்திரனுடைய, திண்புயம் - கெட்டியான
புஜத்தை, துன்னுவித்தார் - சேரும்படி செய்தார்கள் (அதாவது :
அவனுக்கு விவாக விதியால் மணஞ்செய்து கொடுத்தார்கள்), எ-று. (5)
459. போதன புரத்து வேந்தன் பூரசந் திரனுந் தோகை
மாதனம் புணர்ந்து வந்த வின்பத்து மயங்கு நாளுட்
காதலாள் மதுரை யந்தக் காவலன் றேவி தன்பான்
மாதரா ளொருத்தி யானாண் மற்றவ ணீகண் டாயே.
(இ-ள்.)போதனபுரத்து - அந்தப் பௌ தனபுரத்துக்கு, வேந்தன்
- அரசனாகிய, பூரசந்திரனும் - பூர்ணசந்திரனும், தோகை -
ஆண்மயில்போல சரீரச்சாயலையுடைய ஹிரணியவதியின், மாதனம் -
பெரிதாகிய ஸ்தனங்களை, புணர்ந்து - சேர்ந்து, வந்த - வரப்பட்ட,
இன்பத்து - காமசௌக்கியத்தில், மயங்குநாளுள் - கலந்தனுபவிக்கின்ற
காலத்தில், காதலாள் - முன் பிறப்பில் (ஹிரண்யவதியின் மேல்)
வாஞ்சையை யுடைத்தானவளாயிருந்த, மதுரை - மதுரையென்னும்
பிராம்மண ஸ்த்ரீயானவள், (இறந்து), அக்காவலன் - அந்தப் பௌதன
புரவரசனுடைய, தேவி தன்பால் - தேவியாகிய
ஹிரண்யவதியினிடத்தே, மாதாரளொருத்தியானாள் - ஒப்பற்றவோர்
புத்திரியாக வவதரித்தாள், அவள் - அப்புதல்வியானவள், நீ -
நீயேயாகும், கண்டாய் - அறிந்தனையா?, எ-று.
மற்று - அசை. (6) |