றல் - செய்வதை, கண்டாய் - நீ பார்த்தனையா?, (அக்கர்மம்),
அனகனாம் - பாவங்களைப் போக்கும் பிராமணனாகிய,
உருவந்தன்னை - ஆண்ரூபத்தை (அதாவது : முன் பிராமண
புருஷனாகவிருந்தவனை), பெண்ணுருவாக்கி - பின் ஸ்த்ரீருபமாகச்
செய்து, அங்கே மனைவியை - அப்போது பெண்சாதியாகவிருந்த
மதுரையை, மகளுமாக்கி - மறு ஜன்மத்தில் புத்திரியாகச் செய்து,
மகளையே - அப்போது அவளுக்குப் புத்திரியாயிருந்த வாருணியை,
மைந்தனாக்கி - இச்சன்மத்தில் பூர்ணச்சந்திரனென்னும் குமாரனாகச்
செய்ய, (அவர்கள்), நினைவினால் - சுபாசுப பரிணாமத்தின்படி,
முடித்து நின்றார் - இவ்விதமாகப் பிறந்து (தங்கள் காரியங்களை
நிறைவேற்றி) நின்றார்கள், நீதி - இந்தக் கர்ம பரிணாமத்தை,
கடக்கவல்லார் - தாண்ட வல்லவர்கள், (அதாவது : சுத்த
பரிணாமத்தையடைபவர்கள்), யார் - எவர்களிருக்கிறார்கள்? (வீதராக
ஸம்மியக்துவ சுத்தோபயோகத்தில் சேருபவர்கள் மிகவும் அருமை),
எ-று. (9)
463. பத்திர பாகு வென்னும் பரமமா முனிவன் பாரி
லுத்தமன் பாதஞ் சேர்ந்துன் பிதாவின்று முனிவ னாகி
யித்தல மேத்த நின்றா னெனக்குவந் திதத்தை யோதிச்
சித்தமெய் மொழிகண் மூன்றுஞ் செறிவித்த குரவ னாவான்.
(இ-ள்.) பாரில் - இப்பூமியில், உத்தமன் - உத்தமனாகும்,
பத்திரபாகுவென்னும் - பத்திரபாகுவென்று பெயர் கூறப்படுகின்ற, பரம
- உத்கிருஷ்டமாகிய, மாமுனிவன் - மஹாமுனிவனுடைய,
பாதஞ்சேர்ந்து - பாதத்தை அடைந்து, உன் பிதா - உனது தகப்பன்,
இன்று - இப்போது, முனிவனாகி - முனிவானாகி, இத்தலம் -
இப்பூமியிலுள்ளோர், ஏத்த - ஸ்துதிக்க, நின்றான் - தபஸைச்
சேர்ந்தனுஷ்டிப்பவனாய் அதில் நிலைபெற்றிருந்தான், வந்து - (அவன்)
வந்து, எனக்கு - என்றனுக்கு, இதத்தையோதி - இதமாகிய தர்ம
வசனத்தைச் சொல்லி, சித்தம் - எனது மனமும், மெய் - யாக்கையும்,
மொழிகள் - வசனமுமாகிய அந்தக் கரணங்களை, செறிவித்த -
(ஆஸ்ரவங்களில் செல்ல வொட்டாமல் தபத்தில் அதாவது :
சுத்தோபயோக ஹேதுவாகிய சுபோபயோகத்தில்) சேரும்படியாகச்
செய்த, குரவனாவான் - குருக்களுமாவான், எ-று. (10)
464. சாந்தமா மதியைச் சார்ந்து தையலா யுனைப் பயந்தாள்
காந்திதா னாயி னாளக் காவலன் சீய சேனன்
பாந்தளான் மரித்துப் போகிச் சல்லகீ வனத்துக் கைமா
வேந்தனாய் முனிய வேட ரிட்டபே ரசனி கோடம்.
(இ-ள்.) தையலாய் - (என் தாயாகிய) பெண்மணியே!,
உனைப்பயந்தாள் - உன்னைப்பெற்ற தாயானவள், சாந்தமாமதியைச்
சார்ந்து - சாந்திமதிகளென்னும் ஆர்யாங்கனையை யடைந்து,
காந்திதானாயினாள் - ஆரியாங்கனையானாள், |