216மேருமந்தர புராணம்  


 

அக்காவலன்   -  அவ்வரசனாகிய,   சீயசேனன்   - ஸிம்மஸேனன்,
(அதாவது :  உனக்குக்   கணவனும்   எனக்குத் தந்தையுமாகியவன்),
பாந்தளால்   -    சர்ப்பத்தினால்,   மரித்துப்போகி  - இறந்துபோய்,
சல்லகீவனத்து   -  சல்லகீயென்கிற வனத்தில், கைமா வேந்தனாய் -
மற்றுள்ள    யானைகளுக்கெல்லாம்     எஜமானாகி,      முனிய -
எதிர்ப்பட்டவர்களைக் கோபித்துத்திரிய, (அச்செய்கைக்குத் தக) வேடர்
- அவ்வன    வேடர்களினால், இட்ட - (அதற்கு) இடப்பட்ட, பேர் -
பெயரானது, அசனிகோடம் - அசனி கோஷமென்பதாகும், (அதாவது :
அவன் அவ்வனத்தில் பிறந்து எதிர்ப்பட்டவரைக் கோபித்து வேடரால்
இடப்பட்ட     அசனி     கோடமென்னும்   பெயருடன் திரிந்தான்),
எ-று.                                                  (11)

465. நாகாந்தத் தென்னைக் காணா மதத்தினா லந்த நாகம்
    வேகாந்தத் தாலென் மேலே வெகுளியா லோடி வந்த
    தாகாசத் தியானெ ழுந்தே னங்குவந் தென்னைக் காணா
    வேகாந்த நெறிபுக் கின்மை கண்டவ னொருவ னொத்தே.

     (இ-ள்.) நாகாந்தத்து  - பர்வதசிகரத்தில், என்னை - என்றனை,
காணா - பார்த்து,   மதத்தினால்   -  மதத்தினாலே, அந்த நாகம் -
அவ்வியானையானது, வேகாந்தத்தால் - அதிக தீவ்ரத்தோடு, என்மேல்
-   என்றன்மேல்,     வெகுளியால்   - கோபத்தினால், ஓடிவந்தது -
விரைந்தோடிவந்தது,    (அப்போது),   யான் -   நான், ஆகாசத்து -
ஆகாசத்திலே,எழுந்தேன் - (ஆகாசச்சாரணத்தன்மை பெற்றிருப்பதால்
உயர)  எழும்பி நின்றேன், அங்கு வந்து - அவ்விடம் வந்து, என்னை
- மேலே  நின்ற   என்றனை, காணா - பார்த்து, ஏகாந்த நெறிபுக்கு -
ஏகாந்த வழியை  (அதாவது :  ஸ்யாத்வாதமல்லாத) ஏகாந்தவாதமாகிற
மார்க்கத்திலடைந்து,   இன்மை    கண்டவன்   -  அதற்கு முட்டாகி
ஒன்றுமில்லாததைப் பார்த்தவனாகிய, ஒருவன் - ஒரு ஏகாந்தவாதியை,
ஒத்து - நிகர்த்து, எ-று.                                   (12)

466. வெங்கதங் கடாவக் கூற்றொத் தென்னைமே னோக்கிற் பார்க்கச்
    சிங்கமா புரத்து வேந்தே சீயமா சேன ஒய் நீ
    யிங்குவந் தியானை யானாய் பாவத்தா லிதனை விட்டாற்
    பொங்கிவீழ் நரகந் தன்னிற் பொருந்தவோ முயற்சி யென்றேன்.

     (இ-ள்.)  (மேலும்)  வெம்  -   வெப்பம்  பொருந்திய, கதம் -
கோபமானது,   கடாவ    -    தன்னைச்   செலுத்த, கூற்றொத்து -
இயமனைப்போன்று,   என்னை   -   என்னை, மேனோக்கிற் பார்க்க
மேற்பார்வையாகப்  பார்க்க,   (அப்போது   யான் அதனை நோக்கி),
சிங்கமாபுரத்து  - ஸிம்மமஹாபுரத்து, வேந்தே - அரசனே, சீயமாசேன
ஒய்  - ஒய்  ஸிம்மசேனனென்னும்  பெயருடையவனே, நீ - நீ, இங்கு
வந்து - இவ்விடத்தில்  வந்து,  பாவத்தால் - பாபவினையினுதயத்தால்,
யானையானாய்  -  யானையாகப் பிறந்தாய், (அவ்வாறாகியும்), இதனை
விட்டால் - இவ்வியானைச் சரீ