ரத்தை விட்டு நீங்கினால், பொங்கிவீழ் - பெரிதாக உயரத்தில்
எழும்பித் தலைகீழாக விழுகின்ற, நரகந்தன்னில் - நரகத்தில்,
பொருந்தவோ - போய்ப் பிறப்பதற்கோ, முயற்கி - மேலும்
செய்வதாகிய இப்பாப முயற்சி?, என்றேன் - என்று சொன்னேன்,
எ-று. (13)
467. அரசனாய்ப் பெரிய வின்பத் தழுந்தக்கண் டக்க ணாலே
கரியதாய்ப் பெரிய துன்பத் தழுந்தவிக் கானிற் கண்டேன்
பெரியதோர் பாவத் தாலிப் பிறவியைப் பெரிது மஞ்சித்
திருவற மருவு யானச் சீயசந் திரனென் றிட்டேன்.
(இ-ள்.) (பின்னரும்) அரசனாய் - ராஜாவாகியிருந்து, பெரிய
வின்பத்து - பெரிதாகிய ராஜைஸ்வரிய சௌக்கியத்தில்,
அழுந்தக்கண்ட அக் கணாலே - நீ மூழ்கியனுபவிக்கக் கண்ட அந்த
நேத்திரத்தாலேயே, கரியதாய் - யானையாகி, பெரிய துன்பத்து -
பெரிதாகிய துக்கத்தில், அழுந்த - மூழ்க, இக்கானில் - இக்காட்டில்,
கண்டேன் - (நான்) பார்த்தேன், பெரியது - பெரிதாகிய, ஓர் -
ஒப்பற்ற, பாவத்தால் - பாபோதயத்தாலாகிய, இப்பிறவியை - இந்த
விலங்கு கதியில் யானையாக விப்படிப் பிறந்திருக்கும் ஜன்மத்திற்கு,
பெரிதும் - மிகவும், அஞ்சி - (பாபபலமென்று) பயந்து, திருவறம் - ஸ்ரீ
ஜின தர்மத்தை, மருவு - சேரக்கடவாயாக, யான் - நான்,
அச்சீயசந்திரன் - முன் உனது குமாரனாகிய அச்சிம்மச் சந்திரனாகும்,
என்றிட்டேன் - என்றும் சொன்னேன், எ-று. (14)
468. என்றலு மெழுந்த போதத் திறந்தவப் பிறவி தன்னை
யன்றவ னறிந்து மூர்ச்சித் தருவரை போல வீழ்ந்தான்
நின்றதோர் படியிற் றேறி நிறைதவன் போல நின்றான்
சென்றுயா னறத்தைக் கூறச் செவியினைத் தாழ்த்த லோடும்.
(இ-ள்.) என்றலும் - என்று சொல்லவும், எழுந்த -
அவனுக்குண்டாகிய, போதத்து - பவஸ்மிருதி ஞானத்தால், இறந்த -
முன்னீங்கின, அப்பிறவி தன்னை - ராஜாவாயிருந்த அப்பிறப்பினை,
அன்று - அப்பொழுது, அவன் - அவ்வியானையாயிருந்த அவன்,
அறிந்து - தெரிந்து, மூர்ச்சித்து - மூர்ச்சை யடைந்து, அருவரை போல
- பெரிய பர்வதத்தைப் போல, வீழ்ந்தான் - பூமியில் விழுந்தான்,
(பின்னர்) நின்றதோர் படியில் - (அவன் மனத்தில்) நின்றதாகிய ஓர்
விதகுணத்தினால், தேறி - தெளிந்து, நிறைதவன்போல - நிறைந்த
தபஸையுடைய ஒரு முனிவனைப்போல, நின்றான் - (கோபம் நீங்கி
உபசமபரிணாமத்தையடைந்து) நின்றான், யான் - நான், சென்று -
அருகிற்சென்று, அறத்தை - தருமத்தை, கூற - சொல்லத் தொடங்க,
செவியினை - தனது காதுகளை, தாழ்த்தலோடும் - அவன்
தாழ்த்தவும்,
எ-று. (15) |