218மேருமந்தர புராணம்  


 

469. யாக்கையுங் கிளையு மாதி யாவையு நின்ற வில்லை
    வீக்கிய வினையின் றுன்பம் விலக்கலா மரணு மில்லை
    தீக்கதி நான்கிற் சார்ந்து செல்வுழித் துணையு மில்லை
    நீக்கருங் குணங்க ளல்லா னின்றதா னில்லை யன்றே.

     (இ-ள்) யாக்கையும் - சரீரமும், கிளையும் - பந்து ஜனங்களும்,
ஆதி  -  முதலாகிய, யாவையும் - உபசரிதானுபசரித  அசத் பூதங்கள்
யாவையும், நின்றவில்லை - நித்தியமாயுள்ளவைகளல்ல, (அனித்தியமே
யாகும்),  வீக்கிய  - ஆத்மன் ராகத்வேஷமோஹ மென்னும் அசுத்த
பரிணாமமாகிய  விபாவங்களிற்   சென்று  அவற்றால் பந்திக்கப்பட்ட,
வினையின்   -   கர்மங்களின்   பலமாகிய,  துன்பம்  - துன்பத்தை,
விலக்கலாம்  -  நீக்கும்படியான, அரணும் - ரக்ஷணையும், இல்லை -
உண்டாகப்பட்டதில்லை,  தீக்கதிநான்கில் - சதுர்க்கதிகளில், சார்ந்து -
அடைந்து,   செல்வுழி  -  செல்கின்றபோது, துணையும் - சகாயமும்,
இல்லை  -   கிடையாது,    நீக்கரும்   -    நீக்குதற்கு   முடியாத,
குணங்களல்லால் - ஆத்மனுடைய குணங்களேயல்லாமல், நின்றதான் -
பிரியாமல் நிற்கப்பட்டவை, இல்லை - வேறொன்றுமில்லை,எ-று.

     தான் - அசை.                                      (16)

470. உண்டுநாம் விட்ட வல்லாப் புற்கல மொன்று மில்லை
    பண்டுநாம் பிறந்தி டாத பதேசமு முலகி னில்லை
    கொண்டுநாம் நின்ற யாக்கை குணமிலாப் பூதி கந்தம்
    மண்டிநாம் புலத்தின் வீழ்தன் வினைவரும் வாயி லென்றேன்.

     (இ-ள்.) நாம் - ஆத்மராகிய நாம், உண்டு -அனாதி காலமாகக்
கொண்டு      (அதாவது :       ஸ்வீகரித்து),      விட்டவல்லா -
விடப்பட்டவைகளல்லாத,   புற்கலம்  - புத்கலத்திரவியம், ஒன்றும் -
யாதொன்றும், இல்லை - கிடையாது, (அதாவது : லோகத்துள்ள சகல
புத்கலங்களையும்  ஆத்மராகிய  நாம் அனாதியாக அசுத்த நயத்தால்,
கருமநோகர்மங்களாக ஸ்வீகரித்து அனுபவிக்காதது இல்லை), பண்டு -
முற்காலத்தில்,     நாம்    -     ஆத்மராகிய  நாம், பிறந்திடாத -
சுபாசுபகர்மோதயத்தால்    ஜனனத்தை     யடையாத,   (அதாவது :
உற்பத்தியடையாத),  பதேசமும்  - ஏகப்பிரதேசமும், உலகில் - இந்த
லோகத்திலே,  இல்லை - கிடையாது, (எவ்விடங்களிலும் ஜனித்தோம்),
நாம் கொண்டு   -    இப்போது  நாம் எடுத்து, நின்ற - நின்றதாகிய,
யாக்கை   -  இச்சரீரமானது, குணமிலா - சேதன குணமில்லாததாகிய,
பூதிகந்தம் - துர்க்கந்தஹேதுவாகும், நாம் - ஆத்மராகிய நாம், மண்டி
- அவ்விதமான   புத்கலத்தைச்   சேர்ந்து, புலத்தின் - பஞ்சேந்திரிய
விஷயங்களில், வீழ்தல் - சேர்தல் அதாவது : அசுத்தோபயோகத்தால்
அசத்பூதங்களை விஷயிகரித்தல்), வினை - திர