நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 219


 

விய  கர்மங்கள், வரும்  - வந்து சேர்ந்து ஆத்மனுடன் பந்திப்பதற்கு,
வாயில் - வழியாகிய ஆஸ்ரவமாகும், என்றேன் - என்று சொன்னேன்,
எ-று.                                                  (17)

471. அரியதிவ் வுலகின் வென்றோர் திருமொழி யதனைப் பெற்றாற்
    பெரியநற் காட்சி ஞான வொழுக்கமா மவற்றிற் பின்னை
    வருவினை வாயி லெல்லா மடைக்கமுன் மிடைந்த பாவம்
    நிருசரைச் செல்லு மிந்த நெறியைநீ நினைக்க வென்றேன்.

     (இ-ள்.)   இவ்வுலகின்   -    இந்த   வுலகத்தில்,  அரியது -
பெறுதற்கருமையானது,   வென்றோர்   திருமொழி   -  வீதராகனாகி
காதிகர்மங்களை   ஜயித்து   சுத்தோபயோகத்தை   யுற்ற  அரஹந்த
பரமதேவனாலருளிச்     செய்யப்பட்ட     திவ்யத்துவனியினாலாகிய
பரமாகமமாகும், அதனை  - அந்த ஆகமமாகிய சுருதத்தை, பெற்றால்
- ஸ்ரீுதஞானாவரணீய கர்மமுபசமத்தை யடையப்பெற்றுத் தெளிந்தால்,
(அதனால்)   பெரிய  -   பெருமையையுடைய, நற்காட்சி - ஸம்மியக்
தரிசனமும்,  ஞானம்  - அதற்குமேலுண்டாகின்ற ஸம்மியக் ஞானமும்,
ஒழுக்கம்   -   அவற்றாலாகின்ற   ஸம்மியக்  சாரித்திரமும், ஆம் -
ஆத்மனுக்கு    ஏற்படும்,      அவற்றில்    -    அந்த வியவஹார
ரத்னத்திரயத்தால்,  பின்னை - பிறகு, வரும் - அசுத்த பரிணாமத்தால்
வந்து    சேரும்,    வினை   -   கருமங்களினது, வாயிலெல்லாம் -
வழிகளாகிய    அசுத்தபரிணாமங்களை     யெல்லாம்,  அடைக்க -
வாராமற்றடுக்க (அதாவது : சுத்த பரிணாமமாகிய ஆத்ம பாவனையில்
நிற்க),   முன்  -  அனாதியாக   இதற்கு  முன், மிடைந்த - அசுத்த
பரிணாமத்தா   லாத்மனிடத்தில்     அடைந்த,    பாவம்  -   பாப
கருமமெல்லாம்,   நிருசரைச் செல்லும் - நிர்ஜரையை யடையும், இந்த
நெறியை     -     இப்படிப்பட்ட   நல்வழியை (அதாவது : மோக்ஷ
மார்க்கத்தை), நீ - நீ, நினைக்க - நினைக்கக் கடவாயாக, என்றேன் -
என்றும் சொன்னேன், எ-று.                                (18)

472. வெருவுறு துன்ப மாக்கும் விலங்கினு ளெழுந்து வீழ்தல்
     நரகிடை மருவுந் துன்ப நரர்க்கெலாங் குடும்ப மோம்பன்
     மருவிய தேவ லோகின் வழுத்தால் வான வர்க்காந்
     துருவமாய் நின்ற துன்பஞ் சொன்னநாற் கதிக்கு மென்றேன்.

     (இ-ள்.)   விலங்கினுள்    -    விலங்கு   கதியில், வெருவு -
ஸ்வபாவமாகப்   பயத்தையே     எப்போதும்   அடைவது,   உறு -
பொருந்திய,    துன்பமாகும்   -  ஸ்வாபாவிகதுக்கமாகும், நரகிடை -
நரகத்திலே,   எழுந்து    வீழ்தல்  - எழும்பித் தலைகீழாக விழுவது,
(நாரகர்களுக்கு)   மருவு - சேர்ந்த, துன்பம் - ஸ்வாபாவிகதுக்கமாகும்,
நரர்க்கெலாம்   -   மனுஷ்யர்களுக்கெல்லாம்,    குடும்பமோம்பல் -
குடும்பத்தைப்   போஷிக்கிறது ஸ்வபாவதுக்கமாகும்,  தேவலோகின் -
தேவலோகத்தில்,   மருவிய    -   அடைந்திராநின்ற, வானவர்க்கு -
தேவர்களுக்கு, வழுத்தால் - இறந்துவிடுவது,