பமைந்து - அழகமைந்து, எழுதிய - சித்திரக்காரனாலெழுதப்பட்ட,
கொடியனார் - புஷ்பக்கொடிபோன்ற தேவிபரிவாரங்கள், வேள்வி
நீர்மையால் புணர்ந்து - விவாக விதியால்
சேர்ந்து, அற்பு -
அன்பாகிய, நீர் - ஜலத்தையுடைய,
கடலிடை - ஆனந்த
சமுத்திரத்தில், அழுந்து நாளில் - மூழ்குங் காலத்தில், எ-று. (46)
வேறு.
47. பூவிற் கொம்பும் புகழும் படிநல் வடிவின்மா
தேவிப் பட்டம் பெற்றன ளெல்லாந் திருவென்பாள்
காவிக் கண்ணாள் வதனக் கமலத் தளியாய்மண்
காவற் கோமா னியலும் நாளாற் கவின்பெற்றாள்.
(இ-ள்) பூவிற்கொம்பும்
- இலக்குமிதேவியும் (பார்த்து),
புகழும்படி - புகழ்ச்சி செய்யும்படியான, நல் - நன்மையாகிய, வடிவின்
- உருவத்தையுடைய, எல்லாந் திருவென்பாள் - ஸர்வஸ்ரீ என்பவள்,
மாதேவிப்பட்டம் - மஹாதேவிப் பட்டத்தை,
பெற்றனள் -
அடைந்தாள், காவி -
உத்பலம் போன்ற, கண்ணாள் -
கண்களையுடைய அந்த ஸர்வஸ்ரீயினுடைய, வதனம் - முகமாகிற,
கமலத்து - தாமரைப்பூவில், அளியாய் - வண்டாகி
(அதாவது
தாமரையில் வண்டு நெருங்குவதுபோல அவள் கண்பார்வையால்
விரும்பி அவளைச்சேர்ந்து), மண்காவல் -
பூமியைக் காக்கின்ற,
கோமான் - அரசன், இயலும் - செல்கின்ற, நாள் - காலத்தில், கவின்-
தக்க பண்பை, (அதாவது கருப்பத்தை), பெற்றாள்
- அவள்
அடைந்தாள், எ-று. (47)
48. முல்லைக் கன்னிக் கொடிமுன் னரும்பைப் பயந்தாற்போற்
செல்வச் சிறுவற் பயந்தா ளந்தத் திருவன்னாள்
மல்லிற் பொலிதோண் மன்னன் முன்னாண் மதிகாணா
வொல்லென் கடல்போ லுவந்திட் டுலகத் திடர்தீர்த்தான்.
(இ-ள்) கன்னி -
இளமையாகிய, முல்லைக்கொடி - முல்லைக்
கொடியானது, முன் - முதலிலே, அரும்பை - முல்லையரும்பை,
பயந்தாற்போல் - பெற்றதுபோல, அந்தத்
திருவன்னாள் -
இலக்குமிக்குச் சமானமாகிய அந்த ஸர்வஸ்ரீயானவள், செல்வச்சிறுவன்
- ஸ்ரீமானாகிய புத்திரனை, பயந்தாள் - பெற்றாள், மல்லில் - மல்ல யுத்தத்தில்,
பொலி - பொலிவுபெற்றிராநின்ற,
தோள் -
புயங்களையுடைய, மன்னன் - அரசனானவன்,
முன்னாள் -
பூர்வபக்கத்து, மதி - சந்திரனை, காணா - பார்த்து, ஒல்லென்
-
மகிழ்ச்சியால் ஒல்லென்றொலிக்கின்ற, கடல்போல் - சமுத்திரம்போல,
உவந்திட்டு - சந்தோஷம் அடைந்து, உலகத்து - உலகத்திலுள்ள,
இடர் - வருத்தங்களை, தீர்த்தான் - நீக்கினான், எ-று.
வருத்தங்களாவன - வறுமையாதி துன்பங்கள்.
(48)
|