கந்திங்கணோன்பு - பக்ஷோபவாஸமாஸோபவாஸ நோன்புகளோடு,
ஒன்றி - பொருந்தி, சென்றான் - அவற்றின் வழியிலும் ஒழுகினான்,
எ-று. (23)
477. வாரணந் தின்று விட்ட வற்றிய துவலும் புல்லும்
பாரணை யாகப் பார்த்தங் கருந்தவம் பயின்று பான்மைக்
காரண மிதுவென் பான்போற் காலங்கள் பலவு நோற்று
நீரணைந் தோடும் யூப கேசரி நதியைப் புக்கான்.
(இ-ள்.) (பின்னர் அவன்) வாரணம் - இதரயானைகள்,
தின்றுவிட்ட - தின்றுவிட்டுக்கழித்த, வற்றிய - காய்ந்த, துவலும் -
சருகும், புல்லும் - புல்லும், பாரணையாக - தனக்கு உபவாஸ
முடிந்தவுடன் உண்பனவாக, பார்த்து - சோதித்துண்டு, அங்கு -
அக்காட்டில், அருந்தவம் - அரிதாகிய உபவாஸ தவத்தில், பயின்று -
பழகி, பான்மைக்காரணம் - பவ்வியத்துவம் ஆஸன்னமாகுந்
தன்மைக்குக் காரணம், இதுவென்பான்போல் - இந்த அனசனாதியே
யென்று காட்டுபவன்போல, காலங்கள் பலவும் - இப்படி வெகுகாலம்,
நோற்று - இந்த நோன்பை அனுஷ்டித்து, நீரணைந்து - ஜலம்
மிகுதியாகச் சேர்ந்து, ஓடும் - ஓடுகின்ற, யூபகேசரி - யூபகேசரி
யென்னும் பெயரையுடைய, நதியை - ஆற்றை, சேர்ந்தான் -
அடைந்தான், எ-று. (24)
478. உரையினுக் கரிய வண்ண மொருதிங்க ணோன்பு முற்றி
வரையினைப் பிழிந்த தேபோல் வற்றிய காயத் தாற்றங்
கரையினைச் சார்ந்து நீருட் கையினை நீட்டக் கைமா
நிரையினுக் கரசன் கால்கள் நிலத்திடைக் குளிப்ப நின்றான்.
(இ-ள்.)(அவ்வாறடைந்த பின்னர்) கைமாநிரையினுக்கு - யானை
சமூகங்களுக்கெல்லாம், அரசன் - அரச யானையாகிய அவன்,
உரையினுக்கு - சொல்வதற்கு, அரிய வண்ணம் - அரிதான விதமாக,
ஒரு திங்கள் - ஒரு மாதம், நோன்பு - உபவாஸ விரதத்தை, முற்றி -
முடிய (அதனை முடித்து), வரையினை - பர்வதத்தை, பிழிந்ததேபோல்
- பிழிந்தது போல, வற்றிய - வாடின, காயத்து -
சரீரத்தையுடையவனாகி, ஆற்றங்கரையினை, முன் சொன்ன
நதிக்கரையை, சார்ந்து - அடைந்து, நீருள் - ஜலத்தில், கையினை -
தனது துதிக்கையை, நீட்ட - ஜல பானம் பண்ணும்படியாக விட,
(அப்போது), கால்கள் - தன் பாதங்கள், நிலத்திடை - சேறான
மண்ணில், குளிப்ப - புகுந்துகொள்ள, நின்றான் - அதையெடுக்கச்
சக்தியற்று நின்றான், எ-று. (25)
479. அக்கணத் தமைச்ச னாகஞ் சமரமா யதனை விட்டுக்
குக்குட வடிவிற் பாம்பாய்ப் பிறந்தவக் குபதன் காணா |