224மேருமந்தர புராணம்  


 

ஏய  -  இசைந்த,  நல்வினைகள்  -  புண்ணிய  வினைகளும், (ஆய்)
எழுந்த   -   உண்டாகிய,  எல்லாவற்றோடும் - எல்லாவற்றினுடனே,
சென்று   -   அக்கதியிற்சென்று, பாய - பரந்த, நல் - நன்மையாகிய,
அமளிமேல்   -    படுக்கை   மெத்தையின்மேல்,  அணிந்துவந்து -
அலங்காராபரணஸஹிதனாகி  வந்து, மேயினான் - பொருந்தி நித்திரை
செய்பவனாகிய, ஓர் பார்த்திபன் - ஒரு ராஜகுமாரன், எழுந்ததேபோல்
- நித்திரை  தெளிந்து  எழுந்திருந்ததைப்போல், வினையினால் - முன்
சொன்ன   புண்ணிய   வினையினால்,   முடித்து - தன்னுடைய முன்
ஜன்மத்தை    முடித்துவிட்டு   (ஹைஜாபாண     ஸர்வாங்கோபாங்க
ஸுந்தரனாய்  நிறையப்பெற்று), எழுந்தான் - உபபாதசயனத்தினின்றும்
ஷோடஸவர்ஷ  யௌவனனாய்  அந்தர்முகூர்த்தத்தில்     அங்கே)
அவதரித்தான், எ-று.                                     (28)

482. ஆனைதன் னுருவு நீங்கி யிரவிமுற் பிரபைத் தோன்றி
     வானத்து வில்லைப் போல வடிவெலாஞ் சமைந்து மூழ்த்திற்
     றேனொத்த வலங்க லான்பேர் சீதர னென்ப தாகு
     மானொத்த நோக்கி னார்தம் வடிக்கணுக் கிலக்க மானான்.

     (இ-ள்.)  (மேலும்)  ஆனை   -  அசனிகோடமென்கிற யானை
யரசன்,  தன்னுருவு   - தனது ரூபமாகிய யானைச் சரீரத்தை, நீங்கி -
விட்டு, இரவிமுன் - ரவியென்கிற சப்தத்தை முன்னேயுடைய, பிரபை -
பிரபை     யென்கிற,    (அதாவது :     ரவிப்பிரபை    யென்கிற),
தேவவிமானத்தில்,  தோன்றி - உண்டாகி, வானத்து வில்லைப்போல -
ஆகாசத்தில் இடப்பட்ட இந்திரதனுஸுவைப் போல,வடிவெலாம் - சரீர
வடிவமெல்லாம், மூழ்த்தில்  - ஒரு அந்தர் முகூர்த்தத்தில், சமைந்து -
அமைந்து,   மானொத்த   நோக்கினார்   தம் - பெட்டைமான்போல்
மருண்ட   பார்வையையுடைய  தேவஸ்த்ரீகளது, வடி - கூர்மைபெற்ற,
கணுக்கு  - கண்களுக்கு, இலக்கமானான் - பார்த்து மோஹிப்பதற்குக்
குறியானான்,  தேன்   ஒத்த  - இனிமை பொருந்திய, அலங்கலான் -
மாலையையணிந்த   அத்தேவனுடைய,   பேர்   -      நாமமானது,
சீதரனென்பதாகும் - ஸ்ரீதரனென்று சொல்லப்பட்டதாகும், எ-று.  (29)

483. முடியுங்குண் டலமுந் தோடு மாரமுங் குழையும் பூணுங்
     கடகமுங் கழலும் பட்டுங் கலாபமும் வீழு நூலு
     முடனியல் பாகித் தோன்றி யொளியுமிழ்ந் திலங்கு மேனி
     படரொளி பரப்ப மஞ்சிற் பருதியி னிருந்த போழ்தின்.

     (இ-ள்.)  (அவ்வாறு  தோன்றிய  அவன்) முடியும் - கிரீடமும்,
குண்டலமும்  -  கர்ண  குண்டலமும்,  தோடும்  -  கர்ணத்தோடும்,
ஆரமும் - முத்தாஹார ரத்னாஹாரங்களும், குழையும் - தளிர்களாலும்
புஷ்பங்களினாலும்  ஆகிய தெய்லீகம் பொருந்திய வாடாமாலைகளும்,
பூணும் - மற்றுமுள்ள வாபரணங்களும்,