226மேருமந்தர புராணம்  


 

யனுசரித்து,  எழுந்த   -   உண்டாகிய,   ஓதி   -   பவப்பிரத்தியய
அவதிஜ்ஞானமானது,     கருதிற்றெல்லாம்     -         தன்னால்
நினைக்கப்பட்டவைகளையெல்லாம், கைத்தலப் படிகம்போல - கையில்
வைக்கப்பட்ட ஸ்படிகம்போல, கண்டது - அறிந்தது, எ-று.       (32)

486. தந்தியைத் துடக்க மாய வறிந்துயான் முன்பு செய்த
    மந்தமா தவத்திற் பெற்ற துறக்கமந் தாரஞ் சூழ்ந்த
    விந்திர விமான மென்னை யெத்திக்குஞ் சூழ வோதி
    வந்துநின் றிறைஞ்சு கின்றார் வானவர் தாங்க ளென்றான்.

     (இ-ள்.) (அவ்வாறு அவதிஜ் ஞானத்தால் தெளிவுண்டான பிறகு
அவன் தன்னை முன்னே தொடர்ந்த), தந்தியை - யானை ஜன்மத்தை,
அறிந்து   -   தெரிந்து,  யான்  - நான், முன்பு செய்த - பூர்வத்தில்
பண்ணியதான,  மந்தமாந்தவத்தில் அற்பமாகிய தவத்தினால், பெற்ற -
அடைந்த  இவைகள்,  துறக்கம் - தேவருலகமும், மந்தாரம் - மந்தார
விருட்சங்களால்,   சூழ்ந்த    -    சூழப்பட்ட,   இந்திர விமானம் -
தேவவிமானமுமாகும்,    என்னை    -   என்றனை,   எத்திக்கும் -
எப்பக்கங்களிலும்,   சூழ   - தங்கள் கூட்டம் நிறைய, வந்துநின்று -
வந்துகூடி நின்று,  ஓதி    -  ஜயஸ்துதி சொல்லி, இறைஞ்சுகின்றார் -
வணங்குகின்றவர்கள்,   வானவர்கள்    -  ஸாமான்ய தேவர்களாவர்,
என்றான் - என்று கூறினான், எ-று.

     தாம் - அசை.                                     (33)

487. பாடுவார் மதுர கீதந் தேவிமார் மின்னுப் போனின்
    றாடுவா ரரம்பை யார்க ளரிவைய ரிலயத் தோடு
    மூடுதா னெழுந்த வோசை துந்துபி யோசை யென்று
    நீடியா தவதி யாற்பார்த் தறிந்தவ னிருந்த போழ்தில்.

     (இ-ள்.)  (மேலும்)   மதுரம்    -    மாதுரியமாகிய,  கீதம் -
சங்கீதங்களை,     பாடுவார்   -   பாடுகின்றவர்கள்,    தேவிமார் -
தேவிபரிவாரங்களாவர்,  மின்னுப்போனின்று  - மின்னற் கொடிபோல்
நுடங்கி   நின்று,    ஆடுவார்   -    இவ்விடத்தில்     நர்த்தனஞ்
செய்கின்றவர்கள்,  அரம்பையார்கள்  -  தேவநர்த்தன மாதர்களாவர்,
அரிவையர்   -   இவ்விதமான   ஸ்திரீகளுடைய,  இலயத்தோடும் -
மிகவற்புதமாகிய   கூத்துக்களின்   தாளத்தோடும், ஊடுதானெழுந்த -
இடையிலே    கூடி    யுண்டாகிய,   ஓசை - சப்தமானது, துந்துபி -
தேவவாத்தியங்களது,   ஓசையென்று  - சப்தமாகுமென்று, நீடியாது -
தாமதமில்லாம், (சீக்கிரமாக உண்டாகிய), அவதியால் - தனது அவதிஜ்
ஞானத்தால்,   பார்த்து   -    நோக்கி,   அறிந்து   -  (அங்குள்ள
விசேஷங்களையெல்லாம்)  தெரிந்து,  அவன் - அந்த ஸ்ரீதர தேவன்,
இருந்தபோழ்தில் - தனது விமானத்திலிருந்த காலத்தில், எ-று.    (34)