232மேருமந்தர புராணம்  


 

இருபத்திரண்டு கடல்களுக்கு மேல், ஒன்று சென்று - (கல்பாதீதமாகிய
நவக்கிரைவேயகம் ஒன்பது புரை, நவாணுதிசை ஒன்று, பங்சாணுத்தாம்
ஒன்று   ஆகிய    பதினொரு    ஸ்தானங்களுக்கும்     ஒவ்வொரு
ஸ்தானத்திற்கு) ஒவ்வொரு கடல் அதிகமாகிச் சென்று, முப்பத்துமூன்று
- பஞ்சாணுத்திரத்திலிராநின்ற தேவர்களுக்கு முப்பத்து மூன்று கடலும்,
ஆயுகம் - உத்கிருஷ்டாயுஷ்யங்களாக, எய்த - அடைய, எ-று.

     இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.                   (45)

499. கடற்கோ ராயிரத் தாண்டு கடந்தமிர்
    துடற்றும் வெம்பசி தீர மனத்துணா
    கடற்கு நாள்பதி னைந்து கழித்துயிர்த்
    தடக்க மில்லையின் பத்தரத் தேவரே.

     (இ-ள்.) அத்தேவர்   - (அக்கல்பங்களிலுள்ள)  அத்தேவர்கள்,
கடற்கு - ஒரு கடலாயுஷ்யத்திற்கு, ஓராயிரத்தாண்டு கடந்து - ஆயிரம்
வருஷங்கள்  சென்று  (அதாவது : ஆயிரம் வருஷம் கழித்து அல்லது
ஆயிரம்வருஷத்துக்கொரு  தடவை),  உடற்றும் - தங்களை வருத்தும்,
வெம் - வெவ்விய, பசி - பசியானது, தீர - நீங்க, மனத்து அமிர்துணா
- மனத்தினால்   தேவாமிர்தத்தைப்   புசித்தவர்களாகி   (அதாவது :
மனஸாஹார திருப்தர்களாகி), கடற்கு - ஒரு கடலாயுஷ்யத்திற்கு, நாள்
பதினைந்து கழித்து - பதினைந்துதிவசம் அதாவது ஒரு பக்ஷம் கடந்து,
உயிர்த்து    -    உச்வாஸ   நிச்வாஸமுடையவர்களாகி (அதாவது :
மூச்சுவிடக்கூடியவர்களாகி),    அடக்கமில்    -          இந்திரிய
விஷயங்களிலடக்கமில்லாத,     இன்பத்தர்     -  ஸௌக்கியத்தை
யுடையவர்களாவார்கள்,  (இவைகள் அந்தந்தக் கல்பத்தின் ஆயுஷ்ய
கடல்களின்பிரகாரமாகும்), எ . று.

     ஐ - சாரியை; அழகெனினுமாம்.                        (46)

500. எழுமு ழம்முதற் கேழரை வீழ்ந்திடை
    யொழிமு ழங்கற்பத் துச்சியின் மூன்றரை
    விழுமு ழம்மரை யைந்துடன் வீழ்ந்துமே
    லொழிமு ழம்மொன்ற ணுத்தரத் தோக்கமே.

     (இ-ள்.)   இடை   -  இத்தேவலோகத்தினிடத்தே   இராநின்ற
தேவர்களுக்கு,  ஓக்கம் - உன்னதமானது, முதற்கு - ஸௌதர்ம ஈசான
கற்பத்திலிராநின்ற   தேவர்களுக்கு, எழுமுழம் - ஏழு முழமும், ஏழு -
அதற்குமேலுள்ள   ஏழு    யுகளங்களுக்கும், அரை வீழ்ந்து - அரை
அரை   முழம்   குறைந்து,   (அதாவது :   ஸநத்குமார மாஹேந்திர
கற்பத்திலிராநின்ற   தேவர்களுக்கு    ஆறரை     முழமும், பிரம்ம
பிரம்மோத்தா கற்பத்தார்களுக்கு ஆறு முழமும், லாந்தவ காபிஷ்டர்க