ளுக்கு ஐந்தரை முழமும், சுக்கிரமஹா சுக்கிரர்களுக்கு ஐந்து முழமும்,
ஸதார ஸஹஸ்ராரத்தார்களுக்கு நாலரை முழமும, ஆனத
பிராணதகல்பத்தார்களுக்கு நாலு முழமும், ஆய்) கற்பத்துச்சியின் -
ஆரண அச்சுத கல்பத்துத் தேவர்களுக்கு, ஒழிமுழம் - மீந்து நின்ற
முழம், மூன்றரை - மூன்றரையும், மேல் - அதற்கு மேலே, ஐந்து -
(ஹேஷ்டிம, மத்திம, உபரிம பேதத்தால் நவக்கிரைவேயகப்
பிரிவுமூன்று, நவாணுதிசை ஒன்று, பஞ்சாணுத்தரம் ஒன்றாகிய, இந்த)
ஐந்து ஸ்தானங்களுக்கும், உடன் - ஒரு தன்மையாக, விழுமுழம் -
குறையும் முழமானது, அரை வீழ்ந்து - ஒவ்வொரு ஸ்தானத்துக்கும்
அரை அரை முழமாகக் குறைந்து (அதாவது : ஹேஷ்டிமத்திரயத்தில்
மூன்று முழமும், மத்திம கிரைவேயகத்திரயத்தில் இரண்டரை முழமும்,
உபரிமகிரைவேயகத்திரயத்தில் இரண்டு முழம், நவாணுதிசையில் உள்ள
தேவர்களுக்கு ஒன்றரை முழமும் ஆய்), அணுத்தரத்து -
பஞ்சாணுத்தரத்தில் உள்ள தேவர்களுக்கு, ஒழி - மீந்து நின்றது,
முழமொன்று - ஒரு முழமாகும், (இப்படி வரிசையால் தேவர்களுக்கு
உன்னதம் ஏற்பட்டிருக்கின்றது), எ-று. (47)
501. சோதமீ சானர்தம் மேலி ருவர்தம்
மோதிமண் ணொன்றிரண் டம்மு றையுறும்
நீதியா னிலங்கீழ் மூன்று நாலைந்தா
லோதியால் மேலமுன் னால்வ ருணர்வரே.
(இ-ள்.) சோதமீசானர் -ஸௌதர்ம ஈசான கல்பத்துத் தேவர்கள்,
தம் - தங்களுடைய, ஓதி - அவதிஜ்ஞானத்தினால், மண்ணொன்று -
முதல் நரகபரியந்தமும், மேலிருவர் - அதற்குமேலிரண்டு
கல்பத்தார்களாகிய ஸநத்குமார மாஹேந்திர தேவர்கள், தம் -
தங்களுடைய, ஓதி - அவதிஜ்ஞானத்தால், இரண்டு - இரண்டாநரகம்
வரையிலும், அம்முறை - அந்த அவதியின் கிரமத்தால், உறும் -
பொருந்தும், (அதாவது : அறிகின்ற), மேல முன்னால்வர் -
அதற்குமேல் பன்னிரண்டு கல்பத்தார்களும், (நாலு நாலு
கல்பத்தார்களாக), நீதியால் - வரிசைக் கிரமத்தால், நிலங்கீழ் மூன்று -
(பிரம்ம, பிரம்மோத்தர, லாந்தவ, காபிஷ்ட ஆகிய இந்த நாலு
கல்பத்தார்கள்) கீழான மூன்றாநரகம் வரையிலும், நாலு - (சுக்கிர
மஹாசுக்கிர சதாரஸஹஸ்ராரர் ஆகிய இந்த நாலு கல்பத்தார்களும்)
நாலாநரக பரியந்தமும், ஐந்து - (ஆனதப்பிராணத ஆரண அச்சுத
ஆகிய இந்த நான்கு கல்பதேவர்கள்) ஐந்தாநரக பரியந்தமும், ஓதியால்
- தங்களுக்குண்டாகிய அவதிஜ்ஞானத்தால், உணர்வர் - அறிவார்கள்,
எ-று.
முதல் ஒதி - இரண்டிடங்களினும் கூட்டப்பட்டது. (48)
502. ஆற தாவதைக் தேவச்ச மாய்ந்திடு
மீறி லவ்விரு வர்க்குமே ழாவதாம். |