மாறி லாச்சவ்வ சித்தியில் வானவ
ரூறி லாவோதி நாழிகை யுட்கொளும்.
(இ-ள்.) கேவச்சம் - நவக்கிரைவேயகத்திலிராநின்ற தேவர்கள்,
ஆறதாவதை - ஆறாநரகம் வரையில், ஆய்ந்திடும் -
அவதிஜ்ஞானத்தாலறிந்திடுவார்கள், ஈறில் - அந்தியத்திலிராநின்ற,
அவ்விருவர்க்கும் - நவாணுதிசை பஞ்சாணுத்தரத்திலுள்ள அந்த
இரண்டு பேர்களுக்கும், ஏழாவதாம் - ஏழாநரகபரியந்தமும்
அறியலாகும், மாறிலா - மாறுபாடில்லாத (அதாவது : உண்மைப்
பொருளை யுணரும் நேர்மையாகிய), சவ்வசித்தியில் - சர்வார்த்த
சித்தியில் உள்ள, வானவர் - தேவர்கள், ஊறிலா - குற்றமில்லாத, ஓதி
- அவதிஜ்ஞானத்தால், உட்கொள்ளும் - மனத்துட் கொள்கின்ற
(அதாவது : அறிகின்ற), நாழிகை - த்ரஸ நாழிகை பரியந்தம்,
(அறிவார்கள்), எ-று. (49)
503. மிடையின் மேனியைத் தீண்டலிற் காண்டலி
னடையு மின்சொலிற் சிந்தையின் மேவலின்
மடநல் லாரின் வரும்பய னெய்துவ
ரடைவி லோதியிற் சொன்னமுன் னைவரும்.
(இ-ள்.) முன் - முதலிலே, அடைவில் - கிரமமாக, ஓதியில் -
அவதிஜ்ஞானத்தில், சொன்ன - சொல்லப்பட்ட, ஐவரும் - ஐந்து
ஸ்தானத்தார்களும், (அதே வரிசையாக), மிடையில் - (ஸௌதர்ம
ஈசான கற்பத்துத் தேவர்கள் காயப்பிரவீசாரமாகிய) சரீர
புணர்ச்சியாலும், மேனியைத் தீண்டலில் - (ஸநத்குமாரர்,
மாஹேந்திரரிருவரும் ஸ்பரிசப்ரவீசாரமாகிய) சரீரத்தைத் தொடுதலாலும்,
காண்டலின் - (அதன்மேல் நாலு கல்பத்தார்கள், அதாவது : பிரம்ம,
பிரம்மோத்தர, லாந்தவ, காபிஷ்ட, தேவர்கள் கண்ணினால் பார்த்துத்
திருப்தியடைவதாகிய) நேத்திரப்ரவீசாரத்தாலும், அடையும்
இன்சொலின் - (அதன்மேல் சுக்ரமஹாசுக்ர சதாரஸஹஸ்ராரமாகிய
இந்நாற் கற்பத்தேவர்களும்) இனியவசனத்தினாலடையும்
வசனப்ரவீசாரத்தாலும், சிந்தையின் மேவலின் - (ஆனதப்பிராணத
ஆரண அச்சுதமென்னும் நாலு கற்பத்துத் தேவர்கள்) மனதில்
நினைத்தலாலடையும் மனப்ரலீசாரத்தாலும், மடம் -
அறியாமைத்தன்மையையுடைய, நல்லாரின் - தேவஸ்த்ரீகளிடத்தில்,
வரும் - உண்டாகின்ற, பயன் - காமராகத்தினாலாகிய சௌக்கியத்தை,
எய்துவர் - அடைவார்கள், எ-று. (50)
504. பல்ல மைந்தின்மேற் பன்னிரண் டாவதை
யெல்லை யாக விரண்டிரண் டேறிடு
மல்ல நால்வருக் கேழுமிக் கைம்பத்தைம்
பல்ல மாந்தேவி யர்ப்பர மாயுவே. |