(இ-ள்.) தேவியர் - தேவஸ்த்ரீகட்கு, பரமாயு -
உத்கிருஷ்டாயுஷ்யமானது, பல்லமைந்து - (ஸௌதர்ம கல்பத்துத்
தேவஸ்த்ரீகளுக்கு) ஐந்து பல்லமும், மேல் - அதற்குமேலே,
பன்னிரண்டாவதை - பன்னிரண்டாங் கல்பமாகிய ஸஹஸ்ரார
கல்ப்பபரியந்தம், எல்லையாக - அளவாக, இரண்டிரண்டு - ஒவ்வொரு
கல்பத்துக்கு இரண்டு இரண்டு பல்லமாக, ஏறிடும் - விருத்தியாகி
அதிகரிக்கும், அல்ல - அவையல்லாமல், நால்வருக்கு - (ஆனத,
பிராணத, ஆரண, அச்சுதமாகிய) இந்நால்வருக்கும், ஏழுமிக்கு -
(ஒவ்வொரு கற்பத்துக்கு) ஏழு ஏழு பல்லமாக அதிகரித்து, ஐம்பத்தைம்
பல்லம் - (அச்சுத கல்பஸ்த்ரீகட்கு) ஐம்பத்தைந்து பல்லமும், ஆம் -
ஆகும், எ-று.
ஐந்தின் என்பதில், இன் - சாரியை. ஆவதை என்பதில், ஐ -
சாரியை. (51)
505. மோகமின் முனிவன தின்பம் போலவே
தோகையை யனையவர் தொடர்ச்சி யின்றியே
சோகமோ டுறுதுய ரின்றித் தானியல்
பாகுநல் லகமிந்தி ரத்தவ ரின்பமே.
(இ-ள்.) நல் - நன்மையாகிய, அகமிந்திரத்தவர் - அகமிந்திர
தேவர்களுடைய, இன்பம் - ஸௌக்கியமானது, மோகமில் -
மோஹனீய பரிணாமமில்லாத, முனிவனது - முனிவரனுடைய,
இன்பம்போல - சுகத்தைப்போல, தோகையை யனையவர் -
ஆண்மயிலுக்குச் சமானமாகிய சரீரச்சாயலையுடைய தேவஸ்த்ரீகளது,
தொடர்ச்சியின்றியே - ஸம்பந்தமில்லாமலே (அதாவது : அவர்கள்
நிஷ்ப்ரவீசாரராகி), சோகமோடு - மனக்கவற்சியுடன், உறு -
அடைகின்ற, துயர் - துக்கங்களும், இன்றி - இல்லாமல், இயல்பாகும் -
ஸ்வபாவமாகிய ஸௌக்கியமேயாகும், எ-று.
தான் - அசை. (52)
506. சோதமர் சிறுமைச் சோதிட ருத்தம
மோதிய வரைக்கட லுத்த வுத்தமம்
நீதியா னிலங்கீழ்மே லவர்க்கு நின்றதா
மேதமி லிடையன பலவு மாகுமே.
(இ-ள்.)சோதமர் - ஸௌதர்ம ஈசான கல்பத்தாருடைய, சிறுமை
- ஜெகன்னிய்யாயுஷ்யமானது, சோதிடர் - ஜோதிஷ்க தேவர்களுடைய,
உத்தமம் - உத்தமாயுஷ்யமாகிய ஒரு பல்லமாகும், நீதியால் -
இவ்வரிசையால், நிலங்கீழ் - கீழ்க்கற்பத்தாரின் உத்தமாயுஷ்யமானது,
மேலவர்க்கு - மேல் கல்பத்தாருக்கு, நின்றது - ஜெகன்னிய்யாயுஷ்மாக
நிற்கப்பட்டதாக, ஆம் - ஆகும், ஓதிய - (அதுவல்லாமலும்)
அந்தந்தக் கல்பங்களுக்குச் சொல்லப்பட்ட, (உத்கிருஷ்டாயுஷ் |