யத்திற்கு மேலாக), அரைக்கடல் - அரை அரைக்கடல் ஜாஸ்தியாக,
உத்த வுத்தமம் - உத்கிருஷ்டோத்கிருஷ்டாயுஷ்யமாகும், ஏதமில் -
குற்றமில்லாத, இடையன - மத்தியாயுஷ்யமானது, பலவுமாகும் -
பலபிரகாரங்களாகும்,
எ-று. (53)
507. இதுவம ருலகுத னியல்பி தன்கணச்
சதிரமைச் சாசார கற்பத் தின்வழி
யதிற்பெற வவனரு மத்தி யாயுக
மதுரநன் மொழிவரு மின்ப மேவினான்.
(இ-ள்.) அமருலகுதன் - தேவலோகத்தினுடைய, இயல்பு -
ஸ்வரூபமானது, இது - இத்தன்மையதாகும், இதன் கண் -
இப்படிப்பட்ட இத்தேவருலகத்தில், அச்சதிரமை - அந்த அழகமைந்த,
சாசாரகற்பத்தின் வழியதில் - ஸஹஸ்ராரகல்பத்தில் சூர்யப்பிரபை
யென்கிற விமானத்தில், அவன் - அந்த ஸ்ரீதரதேவன், (உற்பவித்து),
அரும் - அருமையாகிய, மத்தியாயுகம் - மத்திமாயுஷ்யத்தை, பெற -
மேற்கூறிய கிரமப்படி அடைய, (பின்னர் அங்கு முன்னுரைத்
தவாறேயிருந்து தேவஸ்த்ரீகளின்) மதுரம் - மாதுரியமாகிய, நன் -
நன்மை பொருந்திய, மொழிவருமின்பம் - வசனத்தினாலுண்டாகிய
ஸௌக்கியத்தை (அதாவது : வசனப்ரவீசார ஸுஹத்தை), மேவினான் -
பொருந்தினான், எ-று. (54)
508. பதினறு கடன்மிசைப் பட்ட வாயுகம்
பதினறு வருடமா யிரங்க டந்துணா
பதினறு பதினைநாள் விட்டு யிர்த்திடா
பதினறு பாவனை யாரைப் பாடுமே.
(இ-ள்.) (அங்ஙனம் இன்பமனுபவித்த இந்த ஸ்ரீதரதேவனுக்கு)
ஆயுகம் - மேற்கூறிய மத்திமாயுஷ்யமானது, பதினறு கடன்மிசை -
பதினாறு கடலுக்கு மேல், பட்ட - சிறிது அதிகமாகியதாம், (இவ்வகை
ஆயுஷ்யத்தையுடைய இவன்), பதினறு வருடமாயிரம் - பதினாறாயிரம்
ஸம்வத்ஸரங்களை, கடந்து - தாண்டி, உணா - உண்டு, (அதாவது :
மனஸாஹாரமுடையவனாய்), பதினறு பதினைநாள் - பதினாறு
பக்ஷங்களை, விட்டு - தாண்டி, உயிர்த்திடா - மூச்சுவிட்டு, (அதாவது :
உச்வாஸ நிச்வாஸங்களையுடையவனாகி), பதினறு பாவனையாரை -
ஷோடசபாவனையை பாவித்து அதனால் தீர்த்தகரநாம மஹாபுண்ணிய
முடையவர்களாகிய ஜீனேந்திரர்களை, பாடும் - ஸ்துதி
செய்வானாயினான், எ-று. (55)
509. நாலரை முழமியல் பாமோர் மாத்திரை
மால்வரை யணுவள வாய்நி னைப்புழிச்
சாலவு நணியவர் போல வெய்தலு
மாலுறு முருப்பல வாகு மேனியான். |