நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 237


 

     (இ-ள்.)  (இன்னும்) நாலரைமுழம் - நாலரைமுழம், இயல்பாம் -
அந்த  ஸ்ரீதரதேவனுக்கு  ஸ்வபாவ  உன்னதமாகும்,  ஓர் மாத்திரை -
(அதுவன்றியும்)  ஒரு க்ஷணத்தில், (அவன்), மால் - பெரிதாகிய, வரை
அளவாய்  -   பர்வதத்தின்   அளவாகவும்,    அணுவளவாய்    -
அணுவளவாய்ச்    சூக்ஷ்மமாகவும்,    நினைப்புழி    -     ஒருவர்
நினைக்குமிடத்தில், சாலவும் - மிகவும், அவர்போல - அவரைப்போல,
நணி   -     பொருந்தி, எய்தலும்     -    அடைவதும், மாலுறு -
பிரமையடையும்படியான,    உருப்பல    எய்தலும்   -   பலவாகிய
ரூபங்களையடைதலும்,   ஆகும்     -    ஆகின்ற,  மேனியான் -
சரீரத்தையுடையவனாயுமிருந்தான், எ-று.

     அளவாய்,  எய்தலும் என்ற  வாக்கியிங்கள் இரண்டிடங்களினும்
கூட்டப்பட்டன.                                          (56)

510. வாசமோ ரோசனை நின்று நாறிடுந்
    தேசுமோ ரோசனை சென்றெ றித்திடும்
    தூசணி மாசெய்தா மேனி யின்குணம்
    பேசலாம் படியது வன்று பீடினால்.

     (இ-ள்.)   தூசு   - வஸ்திரங்களும், அணி - ஆபரணங்களும்,
மாசெய்தா  - அழுக்கடையாத (அதாவது : ஒளிமழுங்காத), மேனியின்
- இந்த   ஸ்ரீதரதேவனுடைய   சரீரத்தின்,   குணம்   - குணமானது
(எப்படிப்பட்டதென்றால்   அதிலுள்ள)    வாசம்  - வாசனையானது,
ஒரோசனை - எப்பக்கங்களிலும் ஒரு யோசனைப்பிரமாணம், நின்று -
வியாபித்து  நின்று, நாறிடும் - பரிமளித்துக்கொண்டிருக்கும், தேசும் -
ஒளியும்,    ஓரோசனை    -  ஒரு யோசனைப்பிரமாணம், சென்று -
எப்பக்கங்களிலும்   வியாபித்து,    எறித்திடும்  - வீசும், பீடினால் -
இவ்விதமாகிய   பெருமைகளினால்,  பேசலாம் படியதுவன்று - (அது)
வர்ணித்துக்கூற முடிந்ததன்று, எ-று.                         (57)

511. முன்செய்நல் வினையினான் முகிலின் மின்னனா
    ரின்செய் வாயவ ரேந்து கொங்கையர்
    வந்திடைச் சூழ்ந்திட வணங்க வானவ
    ரந்தமி லின்பத்து ளமரன் மேவினான்.

     (இ-ள்.)  (இவ்வித  பெருமைகளுடனே) முன்செய் - பூர்வத்தில்
செய்யப்பட்ட,  நல்வினையினால்   -   புண்ணியகர்மத்தி னுதயத்தால்,
முகிலின்    - மேகத்திலுண்டாகிய,    மின்னனார்    -    மின்னற்
கொடி   போன்றவரும்,  இன்செய்வாயவர் - இனிமையைச் செய்கின்ற
சிவந்த   வாயையுடையவரும்,   ஏந்து    -  மார்பினிடத்தில் தரித்த,
கொங்கையர்    -  ஸ்தனங்களையுடையவரும் ஆகிய தேவமாதர்கள்,
வந்து    - எப்பக்கங்களிலுமடைந்து, இடை சூழ்ந்திட - தன்னிடத்தே
சூழ்ந்துகொள்ளவும்,