238மேருமந்தர புராணம்  


 

வானவர் - ஸாமான்னிய  தேவர்கள், வணங்க - பணியவும், அந்தமில்
- தனதாயுஷ்ய  காலம்  வரையில்   முடிவில்லாத,    இன்பத்துள் -
இவ்விதமான   தேவஸௌக்கியத்தில், அமரன் - இந்த ஸ்ரீதரதேவன்,
மேவினான் - (மேற் கூறியபடி) பொருந்தினான், எ-று.         (58)

512. மந்திரி தமிலனும் மரித்து மால்வனத்
    தந்தர மின்றிவா னரம தாகினான்
    சிந்துரக் களிற்றின்மேல் செறிந்த வன்பினால்
    வெந்துய ரறாவர வத்தை வீட்டினான்.

     (இ-ள்.) (ஸ்ரீதரவேதன்  அப்படியிருக்க) மந்திரி - (ஸிம்மஸேன
வாசனுக்கு    ஸத்தியகோஷ    மந்திரிக்குப்    பிறகு ஏற்பட்டிருந்த)
மந்திரியாகிய,  தமிலனும் - தர்மிலனென்னுமவனும், மரித்து - இறந்து,
மால் - பெரிதாகிய, வனத்து - அந்தச் சல்லகீவனத்தில், அந்தரமின்றி
- விக்கினமின்றி (அதாவது :   மரித்தவுடனே),  வானரமதாயினான் -
குரங்காகப்   பிறந்தான், (அவ்வாறு பிறந்தவன்) சிந்துரம் - முகத்தில்
சிந்தூரத்திலகம்   போன்ற    புள்ளிகளையுடை,   களிற்றின்மேல் -
அசனிகோடமென்னும்    யானையின்மேல்,    செறிந்த   - சேர்ந்த,
அன்பினால்  - முற்பவத்தாசையினால், வெம் - வெப்பம் பொருந்திய,
துயர்   - துன்பங்கள்,  அறா - நீங்காத, அரவத்தை - அக் குக்குட
ஸர்ப்பத்தை, வீட்டினான் - கொன்றான், எ-று.               (59)

513. உரகம்வா னரத்தினா லுயிரி ழந்துபோய்
    நாகமூன் றாவதை நண்ணி யெண்ணரும்
    பெரியமா துயரம துற்ற தாற்றவும்
    விரகினால் வினைகணின் றுதயஞ் செய்யவே.

     (இ-ள்.) உரகம் - அக் குக்குடஸர்ப்பமானது, வானரத்தினால் -
முன்  சொன்ன குரங்கினால், உயிரிழந்து போய் - அச்சரீரத்தினின்றும்
உயிர்  நீங்கிப்போய், நரகமூன்றாவதை - மூன்றா நரகத்தை, நண்ணி -
அடைந்து   நரகனாயவதரித்து, விரகினால் - கிரமத்தால், வினைகள் -
பாபவினைகள்,  நின்று  - தங்கிநின்று, உதயஞ் செய்ய - உதயத்தைக்
கொடுக்க,   அது  - அக் குக்குடஸர்ப்பமாகி முன்னிருந்து இப்போது
நாரகனாய்ப்   பூர்வம்    ஸ்ரீபூதியாகிய    ஆத்மன்,   எண்ணரும் -
நினைத்தற்கரிய,   பெரும் - பெரிதாகிய, மாதுயரம் - மஹாதுக்கத்தை,
ஆற்றவும் - மிகவும், உற்றது - அந்நரகத்தில் அடைந்தது, எ-று. (60)

514. ஒட்டகங் கழுதைநாய் பாம்பு வாசியூ
    னிட்டதோர் குழியின்மிக் கெழுந்து நாறிடும்
    மட்டிடை வீழ்ந்ததி லமைந்த யாக்கையான்
    சுட்டதோர் பனைத்துணிப் போல தூங்கினான்.