240மேருமந்தர புராணம்  


 

517. சீக்குழி யுட்புக நூக்கி னார்சிலர்
    வாக்கினார் செம்பினை யுருக்கி வாயிடைத்
    தூக்கிமுண் மத்திகை யாற்பு டைத்திரு
    பாக்கதாய்ப் பிளந்திடு வாரு மாயினார்.

     (இ-ள்.) சிலர் - சில புராதன நாரகர்கள் கூடிக்கொண்டு, (இந்த
நூதன நாரகனை), சீக்குழியுள் - சீழ்க்குழியினுள், புக - விழும்படியாக,
நூக்கினார்  -   தள்ளினார்கள்,   செம்பினை  - செம்பை, உருக்கி -
ஜலமாகும்படி   உருக்கி,   வாயிடை - அவன் வாயில், வாக்கினார் -
ஊற்றினார்கள்,   தூக்கி   -    உயரத்தூக்கி,  முள் மத்திகையால் -
முட்களையுடைய   சம்மட்டிகளால்,   புடைத்து - அவனை அடித்து,
இருபாக்கதாய்    -   இரண்டு   பங்காக, பிளந்திடுவாருமாயினார் -
பிளப்பவருமானார்கள், எ-று.                              (64)

518. மலையெனப் பெரியதோ ரிருப்பு வட்டினை
    யுலையழற் போற்கணத் துருகச் சுட்டிடு
    நிலையழற் குட்டத்து வெந்து நீடியா
    துலையின்வெம் பலியென வெழுந்து வீழுமே.

     (இ-ள்.)  (மேலும்  அவர்கள்   அவனை   நெருப்பிலே  யிட)
மலையென    -    பர்வதம்போல,    பெரியது   -   பெரியதாகிய,
ஓரிருப்புவட்டினை    - ஒரு  இரும்புக்குண்டை, உலையழல் போல் -
கருமானுடைய    உலைக்கட    அக்கினிபோல, கணத்து   -   ஒரு
க்ஷணநேரத்தில்,  உருக - உருகும்படியாக, சுட்டிடும் - சுடும்படியான,
நிலை  - ஒரு காலும் பற்றறாமல் நிலைத்திராநின்ற, அழற் குட்டத்து -
அக்கினித்   திரளில்,  வெந்து - வேதலுற்று, நீடியாது - நீட்டிக்காமல்
(அதாவது :   உடனுக்குடன் சீக்கிரமாக), உலையின் வெம்பலியென -
உலையிலே   கொதிக்கப்பட்ட    சோற்றுப்பருக்கை    வெப்பத்தின்
அழற்சியால்    தானாகவே    எழும்புகிறது போல, எழுந்து வீழும் -
(அவன்) எழும்பி விழுவான், எ-று.                          (65)

519. பஞ்செழ வுலர்ந்துநாப் பரந்த வேட்கையா
    னஞ்சினைமடுத்துட னடுங்கி வீழ்ந்திடா
    துஞ்சினுந் துஞ்சிடாத் துயர மாக்கட
    லெஞ்சலி லாயுக மிரக்க மொன்றிலான்.

     (இ-ள்.) (மேலும் அவன்) பஞ்செழ - பஞ்சு பறக்க, உலர்ந்து -
காய்ந்து,    நா   -  நாக்கிலே,  பரந்த   -  மிகுதியாக உண்டாகிய,
வேட்கையால்  -  தண்ணீர்த்  தாகத்தினால் (ஜலம் குடிக்க நினைந்து
அப்போது அங்குள்ளவர்களால் கொடுக்கப்பட்ட), நஞ்சினை மடுத்து -
விஷநீரைக்குடித்து, நடுங்கி - பயந்து, வீழ்ந்திடா -