மூர்ச்சையால் விழுந்து, துஞ்சினும் துஞ்சிடா -
மரணமூர்ச்சையடைந்தாலும் சாகாத, துயரம் - இவ்வித நரக
துக்கமானது, எஞ்சலில் - குறைவில்லாத, மாக்கடல் - பெரிதாகிய
கடல்களாகிய, ஆயுகம் - தனதாயுஷ்யத்தில், இரக்க மொன்றிலான் -
நடுவிற் சாதலிலனாகிய அனப மிருத்தியாயுஷ்யத்தை யுடையவனாய்த்
துக்கிப்பவனானான், எ-று. (66)
520. நின்றுநின் றுடற்றும்வெம் பசியை நோக்குவா
னொன்றிநின் றவர்நினைந் திட்ட வக்கணஞ்
சென்றுநஞ் செத்திசை யுஞ்செ றிந்திடா
பொன்றநின் றுடற்றிடுங் கணந்தொ றும்புகா.
(இ-ள்.)(மேலும் அவன்) நின்று நின்று - நீங்காமல் எப்போதும்
நின்று, உடற்றும் - வருத்துகின்ற, வெம் - வெப்பம் பொருந்திய,
பசியை - பசிநோயை, நோக்குவான் - பார்த்து அதனை
நீக்குபொருட்டு வருந்துவான், (அப்பொழுது), ஒன்றி - பொருந்தி,
நின்றவர் - அங்கே நின்றவர்கள், நினைந்திட்ட - (அவனுக்கு
ஆகாரத்திற்குப் பதிலாக விஷத்தை ஊட்ட வேண்டுமென்று) நினைந்த,
அக்கணம் - அதே சமயத்தில், நஞ்சு - (அவர்களால் இடப்பட்ட)
விஷமானது, எத்திசையும் சென்று - எப்பக்கத்திலு மடைந்து, புகா -
அவனுட்புகுந்து, செறிந்திடா - நிறைந்து, (அவன் பசி வேதனை
பொறுக்கமாட்டாமல் அதைப் புசிக்க), பொன்ற நின்று - அவன்
பிரஜ்ஞை தப்பி மரணாவஸ்தையடைய நின்று, கணந்தொறும் -
எச்சமயத்திலும், உடற்றிடும் - (அவனுக்கு) வேதனையைச் செய்யும்,
எ-று. (67)
521. முழமிசை முப்பத்தோர் வில்லு யர்ந்தவ
னெழுமிசைப் புகைமுப்பத் தொன்று காதமும்
விழுமுடன் வெங்கனல் வெண்ணெய் போன்றுடைந்
தெழுகடற் றானுமீ தவனி யற்கையே.
(இ-ள்.) (பின்னும்) அவன் - மூன்றாநரகத்தில் ஜனித்த
அந்நாரகன், முழமிசை - ஒரு முழம் மேலாகிய, முப்பத்தோர் வில்லு -
முப்பத்தொரு வில்லு, (அதாவது : முப்பத்தொன்றேகால் வில்லு),
உயர்ந்து - சரீர உன்னத முடையவனாகி, புகைமுப்பத்தொன்று -
முப்பத்தொரு யோசனையும், காதமும் - ஒருகாதமும், (அதாவது :
முப்பத்தொன்றேகால் யோஜனை உயரம்), மிசை - நாகபூமியினின்றும்
மேலே, எழும் - எழும்புவான், வெம் - வெப்பமுடைய, கனல் -
அக்கினியிலகப்பட்ட, வெண்ணெய்போன்று - வெண்ணெயைப்போல்,
உடைந்து - நரகஸந்தாபத்தாலுருகி, உடன் - உடனே, விழும் - தலை
கீழாக விழுவான், எழு கடல்தானும் - தனக்குண்டாகிய
ஆயுஷ்யமாகிய ஏழுகடல் பரியந்தம், அவன் - அந்நரகனது, இயற்கை
- ஸ்வபாவ துக்கமானது, ஈது - இதுவாயிருந்தது, எ-று. (68) |