நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 243


 

    சுந்தர முத்துங் கொம்புங் கொண்டுபின் வணிகன் பூர
    சந்திரன் சரணஞ் சார்ந்து சாலவுஞ் சிறப்புப் பெற்றான்.

    (இ-ள்.)     (அதன்     மேல்)      தந்தமும்    -    அந்த
யானைக்கொம்புகளையும்,   முத்தும்  - முத்துக்களையும், கொண்டு -
எடுத்துக்கொண்டுபோய், தனமித்தன்றன்னை  - சிம்மமஹாபுரத்திலுள்ள
தனமித்திரன் என்னும் ஒரு வியாபாரியை, கண்டு - பார்த்து, வெந்திறல்
- வெப்பம்    பொருந்திய     வலிமையையுடைய,     வேடன்   -
அவ்வேடனானவன்,    ஈந்து  -  அவனிடம் கொடுத்து, வேண்டுவ -
தனக்கு   வேண்டிய    பொருள்களை, கொண்டு - வாங்கிக்கொண்டு,
போனான்   -    போய்  விட்டான், பின் - பிறகு, வணிகன் - அந்த
வியாபாரியானவன்,    சுந்தரம்     - அழகிய,      முத்தும்      -
அம்முத்துக்களையும்,     கொம்பும்  - கொம்புகளையும், கொண்டு -
எடுத்துக்கொண்டுபோய்,    பூரசந்திரன்    -   அந்நகரத்தரசனாகிய
பூர்ணசந்திரனுடைய,   சரணம்   - பாதங்களை, சார்ந்து - அடைந்து
நமஸ்கரித்து,   (அவனிடம்  கொடுத்து), சாலவும் - மிகவும், சிறப்பு -
மேம்பாட்டை, பெற்றான் - அடைந்தான், எ-று.              (71)

525. பைம்பொனும் மணியும் முத்தும் பவழமும் பயின்ற மஞ்சிற்
    கொம்பிரண் டினையும் நாலு கால்களாய்க் கடைந்து கூட்டி
    வம்பணி முலையி னார்கள் சூழமற் றதனை யேறிக்
    கொம்பிடைப் பிறந்த முத்த மாலைகொண் டணிந்தி ருந்தான்.

     (இ-ள்.)   (பிறகு)   பைம்   - பசுமை பொருந்திய, பொனும் -
ஸ்வர்ணமும்,   மணியும்  - அரதனங்களும், முத்தும் - முத்துக்களும்,
பவழமும் - பவளங்களும், பயின்ற - (சேர்த்துச் செய்யப்பட்டபடியால்)
கலந்து  தங்கிப்பிரகாசிக்கின்ற, மஞ்சில் - தனது படுக்கைக் கட்டிலில்,
கொம்பிரண்டினையும்  - அந்த யானைக் கொம்புகளிரண்டையும், நாலு
கால்களாய்   -   நான்கு   கால்களாக, கடைந்து - கடை சற்பிடித்து
(அதாவது : கடைசல் யந்திரத்தின் வேலையால் விசித்திரமாக ஒழுங்கு
செய்து),   கூட்டி    -     பூட்டி  (அதாவது : சேர்த்து), வம்பணி -
ரவிக்கையையணிந்த,     முலையினார்கள்    -   தனங்களையுடைய
ஸ்த்ரீமார்கள்,  சூழ - சூழும்படியாக, அதனை - அக்கட்டிலில், ஏறி -
ஏறினவனாகி,    கொம்பிடை  -  அந்தக் கொம்பினிடமாக, பிறந்த -
உண்டான,  முத்தம் - முத்துக்களை, மாலை கொண்டு - மாலையாகச்
செய்து   கைக்கொண்டு,  அணிந்து - கழுத்திற் பூண்டு, இருந்தான் -
இருந்தனன், எ-று.                                       (72)

526. இங்கிந்த மாற்றின் றன்மை கேட்டபின் யாரு மில்லைப்
    பொங்கிய புலத்தி னீங்கி யறந்தலைப் படாது போவார்
    சிங்கவே றனைய காளைக் கிதனைநீ செப்பு தீமைப்
    பங்கநல் லறத்தி னாகு மெனப்பணிந் துவந்து போனாள்.