244மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  இங்கு  - இவ்வுலகத்தில்,  இந்த - இவ்வாறுண்டாகிய
இந்த, மாற்றின்தன்மை - ஸம்ஸாரத்தினது ஸ்வரூபத்தை, கேட்டபின் -
கேட்ட  பிற்பாடு,  பொங்கிய  -   மிகுதியாகிய, புலத்தின் - இந்திரிய
விஷயங்களினின்றும்,   நீங்கி   - விலகி,  அறந்தலைப்படாது - தர்ம
ஸ்பரூபத்தில்  சேராமல், போவார்  - அஞ்ஞானத்தில்  செல்பவர்கள்,
யாரும்  -  எவர்களும், இல்லை - கிடையாது (எப்படிப்பட்டவர்களும்
அஞ்ஞான   நீங்கி    ஸுஜ்ஞானத்தைப்  பெறுவார்கள்; ஆகையால்),
சிங்கவேறனைய  - ஆண்சிங்கம்    போன்ற  பராக்கிரமத்தையுடைய,
காளைக்கு - விட புருஷனாகிய பூர்ணச்சந்திரனுக்கு, இதனை - இந்தச்
சரித்திரத்தை,   நீ - நீ,  செப்பு - சொல்வாயாக, (அதனால்) தீமை -
பொல்லாங்குகளுக்கெல்லாம்,   பங்கம்  - கெடுதியாகிய, (அதாவது :
பொல்லாங்குகளைக்  கெடுத்து நீக்கும்படியான), நல்லறத்தின் - நல்ல
ஸ்ரீஜினதர்மத்தில்,  ஆகும்   -    பிரவேசிப்பான்,   என  - என்று
ஸிம்மச்சந்த்ரி  முனிவரன் சொல்ல, பணிந்து - இராமதத்தை வணங்கி,
உவந்து  -   சந்தோஷித்து, போனாள் - போய்விட்டாள், (நகருக்குத்
திரும்பினாள்), எ-று.                                     (73)

527. மாதவன் பாத மேற்றி மனோகர வனத்தி னின்று
    மாதரத் தோடும் போகி யரசனாம் மகனைக் கண்டு
    காதலுங் களிப்பு நீங்குங் கதையினை யுரைப்பக் கேளா
    மேதினிக் கிறைவன் சால வெய்துயிர்த் தவல முற்றான்.

     (இ-ள்.)   மாதவன்   -   மஹாதபஸையுடைய   ஸிம்மச்சந்திர
முனிவரனுடைய,   பாதம்   -   பாதங்களை,  ஏற்றி - உயர்த்திக்கூறி
ஸ்தோத்திரம்பண்ணி,    மனோகரம்    -    மனதுக்குரம்மியமாகிய,
வனத்தினின்றும்    -     அவ்வனத்தினின்றும்,    ஆதரத்தோடும் -
ப்ரீதியோடும்,    போயி   - நகரத்திற்போய்,   அரசனாம் மகனை -
இராஜகுமாரனாகிய   பூர்ணசந்திரனை,   கண்டு - இராஜமாளிகையில்
பார்த்து,  காதலும் - ஆசையும், களிப்பும் - சந்தோஷமும், நீங்கும் -
நீங்கி   வைராக்யமுண்டாகும்படியான,   கதையினை - (முனிவரனால்
சொல்லக்   கேட்ட)    அக்கதையை,  உரைப்ப - சொல்ல, கேளா -
அதைக்கேட்டு,    மேதினிக்கிறைவன்   -   இப்பூமிக்கு அரசனாகிய
பூர்ணசந்திரன்,    சால   - மிகவும்,  வெய்துயிர்த்து  - வெப்பமாகப்
பெருமூச்செறிந்து, அவலமுற்றான் - வருத்தமடைந்தான், எ-று.    (74)

528. மண்ணினுக் கிறைவ னாயு மறத்தினை மறந்து முன்னைப்
    புண்ணிய முலர்ந்த போழ்தின் விலங்கிடைப் புக்கு வீழ்ந்தான்
    விண்ணினுக் கிறைவ னானான் விலங்கினின் றறத்தை மேவி
    யண்ணலுன் றாதை நீயு நல்லதீங் கறிந்து கொள்ளே.

     (இ-ள்.)  (அதன்    மேல்   இராமதத்தை  அவனை நோக்கி),
அண்ணல்  -   பெருமையிற் சிறந்த புத்திரனே!, உன் தாதை - உனது
தகப்பனான சிம்மஸேன