வரசன், மண்ணினுக்கு - இப்பூமிக்கு, இறைவனாயும் -
இராஜாவாகியிருந்தும், அறத்தினை - ஸ்ரீஜின தருமத்தினது
ஸ்வரூபத்தை, மறந்து - அறியாமல் மறந்து, முன்னைப்புண்ணியம் -
பூர்வபுண்ணியமானது, உலர்ந்தபோழ்தில் -காய்ந்து நீங்கின காலத்தில்,
விலங்கிடைப்புக்கு - திரியக்கதியில் அடைந்து, வீழ்ந்தான் - வீழ்ந்து
யானையாகப் பிறந்தான், விலங்கினின்று - அந்த விலங்கு கதியில்
யானையாக இருந்து, அறத்தை மேவி - ஸ்ரீஜின தருமத்தைப்
பொருந்தி, விண்ணினுக்கு - தேவலோகத்துக்கு, இறைவனானான் -
எஜமானானான், நீயும் - நீயும், ஈங்கு - இவ்விடத்தில், நல்லது -
நன்மையின்னதென்பதை, அறிந்துகொள் - தெரிந்து கொள்ளவாயாக,
எ-று. (75)
529. இலங்கொளி மகுடஞ் சூடி யிருநிலக் கிழவ னாயும்
புலங்கண்மேற் புரிந்தெ ழுந்து விலங்கிடைப் புரிந்து வீழ்ந்தான்
விலங்கிடைப் புலங்க டம்மை வெறுத்துவிண் ணுலகிற் சென்றா
னலங்கலந் தாரி னாய்நீ பறிந்துகொ ணல்ல தென்றாள்.
(இ-ள்.) இலங்கும் - விளங்கும், ஒளி - பிரகாசம் பொருந்திய,
மகுடம் - கிரீடத்தை, சூடி - தரித்து, இரு நிலம் - பெரிதாகிய பூமிக்கு,
கிழவனாயும் - உரிய அரசனாயிருந்தும், (அம்மன்னன்), புலங்கள்மேல்
- பங்சேந்திரிய விஷயங்கள்மேல், புரிந்தெழுந்து - மிகுதியாக
விரும்பிச் சென்று, புரிந்து - (அவ்விஷயங்களைச்) செய்து, விலங்கிடை
- திரியக்காகிய பிறவியில், வீழ்ந்தான் - (மேற்கூறியபடி) வீழ்ந்து
யானையாய்ப் பிறந்தான், விலங்கிடை - அந்த யானைப்பிறப்பில்,
புலங்கடம்மை - இந்திரிய விஷயங்களை, வெறுத்து - வெறுப்புற்று
நீக்கி வைராக்கியமடைந்து, விண்ணுலகிற் சென்றான் -
தேவலோகத்தை யடைந்தான், அலங்கல் - அசைகின்ற, அம் -
அழகிய, தாரினாய் - மாலையையணிந்திராநின்ற அரசனே!, நீ - நீ,
(இதனால்) நல்லது - நன்மையான ஸ்வரூபத்தை, அறிந்துகொள் -
தெரிந்துகொள், என்றாள் - என்று இருமுறை அதனை வற்புறுத்திச்
சொன்னாள், எ-று. (76)
530. பற்றினாற் பூதி பாம்பாய்ச் சமரமாய்க் கோழிப் பாம்பாய்ச்
செற்றத்தாற் றீயில் வெம்பு நரகத்தைச் செறிந்து நின்றான்
கொற்றவேற் குமர நீயிப் பிறவியைக் குறுக வஞ்சிற்
செற்றமும் பற்று நீங்கித் திருவறம் புணர்க வென்றாள்.
(இ-ள்.) (அவ்வாறு கூறிப் பின்னரும்) பூதி - ஸ்ரீபூதி
மந்திரியானவன், பற்றினால் - பிற பொருளாசையாகிற ராகத்தால்,
(இறந்து), பாம்பாய் - அகந்தன ஸர்ப்பமாகி, (இறந்து), சமரமாய் -
(பிறகு) சமரீ மிருகமாகி, கோழிப்பாம்பாய் - (அதன் பின்பு)
கோழிப்பாம்பாகி, செற்றத்தால் - அரசன்மேல் வைத்த துவேஷத்தால்
(அதாவது : அனந்தானுபந்திக் குரோதத்தால் அவ்வரசன் எடுத்த
ஜன்ம |