246மேருமந்தர புராணம்  


 

மாகிய     யானையைக்கடித்து),    தீயில்    வெம்பும்   -   (பிறகு)
அக்கினியைப்போல் வேகின்ற, நரகத்தை -மூன்றா நரகத்தை, செறிந்து
- அடைந்து,   நின்றான்  - நரகனாய்ப் பிறந்து நின்றான், கொற்றம் -
வெற்றி   பொருந்திய,    வேல்    -  வேலாயுதத்தையுடைய, குமர -
குமாரனே!,    நீ - நீ,      இப்பிறவியை     -   இப்பெற்றியதாகிய
தீக்கதிப்பிறவியை,   குறுக - அடைய, அஞ்சில் - பயப்படுவாயானால்,
செற்றமும்  - த்வேஷத்தையும், பற்றும் - ராகத்தையும், நீங்கி - விட்டு
நீங்கி   ஸமத்வீபாவமாகி,   திருவறம் - ஸ்ரீஜிந தருமத்தை, புணர்க -
சேரக்கடவாயாக, என்றாள் - என்றும் சொல்லினாள், எ-று.      (77)

531. அரசவுன் றாதை யுற்ற தருந்தவன் சீய சந்தன்
    றிரிவித வுலக மேத்துந் திருவடி பணிந்து கேட்டேன்
    ஒருவிநீ மறத்தை யிந்தப் பிறப்புநீ ருகுத்தி டாதே
    மருவுநீ யறத்தை யிந்த மாற்றது வடிவி தென்றாள்.

     (இ-ள்.) (அவ்வாறு சொல்லிப் பின்னரும்) அரச - பூர்ணச்சந்திர
ராஜனே!,   உன்     -     உன்னுடைய,    தாதை  - தகப்பனாகிய
சிம்மஸேனவரசன்,    உற்றது    - இப்படிக் கதியடைந்த சங்கதியை,
அருந்தவன்    -   அரிதாகிய  தபஸையுடையவனாகிய, சீயசந்தன் -
சிம்மச்சந்திர    முனிவனுடைய, திரிவிதவுலகம் - மூன்றுவிதலோகமும்,
ஏத்தும் - ஸ்துதிக்கும்படியான, திருவடி - அழகிய பாதத்தை, பணிந்து
- வணங்கி, கேட்டேன் - அவரால் சொல்ல நான் கேட்டேன், நீ - நீ,
இந்தப்பிறப்பு   -    இம்மனுஷ்ய   பிறப்பினுடைய, நீர் - குணத்தை,
உகுத்திடாது  - நாசமாக்காமல், மறத்தை - பாபத்தொழிலை, ஒருவி -
நீங்கி,   நீ - நீ, அறத்தை - ஸ்ரீஜின தருமத்தை, மருவு - சேர்வாயாக,
இந்தமாற்றது - இந்த ஸம்ஸாரத்தினது, வடிவு - ஸ்வரூபமானது, இது -
இத்தன்மையாக  நிலையில்லாத ஸ்வரூபமாகிய இதுவாகும், என்றாள் -
என்றும் சொன்னாள், எ-று.                                (78)

532. ஆங்கவ ளுரைத்த வின்சொ லறவிளக் கெறிப்ப வுள்ள
     நீங்கிய திருளு நீங்க நெறியினைச் சிறிது கண்டான்
     தாங்கருந் துன்ப முற்றான் றாதைபாற் காத லாற்பின்
     றீங்கெலா நீங்க முத்தைக் கொம்பொடு தீயின் வைத்தான்.

     (இ-ள்.)   ஆங்கவள்   -       அவ்விடத்து         அந்த
இராமதத்தாரியாங்கனை, உரைத்த - சொல்லிய, இன் - இனிமையாகிய,
சொல்   -   வசனமென்னும்,   அறவிளக்கு - தர்மமாகிற தீபமானது,
உள்ளம்    -   பூர்ணச்சந்திரனது மனதில், எறிப்ப - பிரகாசித்தலால்,
இருளும் - மித்தியாத்துவாதி அந்தகாரமும், நீங்கியது - நீங்கி உபசம
மடைந்தது,   நீங்க . அவ்வாறு உபசமபாவத்தால் அந்த காரம் நீங்க,
சிறிது நெறி