யினை - கொஞ்சம் ஸத்பூத வியவஹார நயமார்க்கத்தை, கண்டான் -
அவன் அறிந்தான், (அங்ஙனம் அறிந்த மாத்திரத்தில்), தாங்கரும் -
சகித்தற்கரிய, துன்பம் - துக்கத்தை, உற்றான் - அடைந்தவனாகி,
தாதை பால் காதலால் - தகப்பன் மேலாகிய வாஞ்சையால், பின் -
பிறகு, தீங்கெலாம் -பொல்லாங்குகளெல்லாம், நீங்கி - நீங்கும்படியாக,
கொம்பொடு - கட்டில் கால்களாகிய அவ்வியானைக் கொம்புகளோடு,
முத்தை - முத்துமாலையையும், தீயின் - அக்கினியில், வைத்தான் -
இட்டு எரித்தான், எ-று. (79)
533. பான்மையங் குதித்த போழ்திற் பைந்தொடிப் பவழ வாயார்
நீர்மையங் குரித்த லாமை மனத்தகத் தகன்று நிற்பச்
சீர்மையங் குதிப்ப நன்மை செறிந்தனன் செறியுந் தோறுங்
கூர்மையங் குதிக்கும் வைவேற் குமரனுக் குரகர் கோவே.
(இ-ள்.) உரகர்கோவே - தரணேந்திரனே!, வை -
கூர்மைபொருந்திய, வேல் - வேலாயுதத்தைக் கையில் தரித்திராநின்ற,
குமரனுக்கு - பூர்ணச்சந்திர குமாரனுக்கு, பான்மை -
பவ்வியத்துவமானது, அங்கு - அவ்விடத்தில் (அத்தருமத்தைக்
கேட்டதினின்றும்), உதித்தபோழ்தில் -உதயத்தைக்கொடுத்த காலத்தில்,
பைம் - பசுமைபொருந்திய, தொடி - வளையல்களையணிந்த,
பவழவாயார் - பவழம்போற் சிவந்த வாயையுடைய
ஸ்த்ரீமார்களிடத்துண்டாகிய, நீர்மை - குணமாகிய காமராகமானது,
அங்கு - அவ்வரண்மனையில், மனத்தகத்து - மனதில், உரித்து -
உரித்தான தன்மை, அலாமை - இல்லாமல், அகன்று நிற்ப - நீங்கி
நிற்க, அங்கு - அப்பொழுது, சீர்மை - சிறப்பாகிய புண்ணியவினை,
அங்கு அத்தருணத்தில், உதிப்ப - உதயத்தைக் கொடுப்ப, நன்மை -
நன்மைக்கேதுவாகிய ஸம்மியக் ஞானத்தை, செறிந்தனன் - சேர்ந்து
பழகினான், செறியுந்தோறும் - அப்படிச் சேருந்தோறும், கூர்மை -
நிஜாத்மருசிலக்ஷணமாம் தர்சனஹேதுவாகிய குசாக்கிர
புத்திக்கூர்மையானது, அங்கு - அவ்விடத்தில், உதிக்கும் - உதயமாகக்
கூடியதாயிற்று, (அதாவது : உதயஞ் செய்தது), எ-று.
அங்கு - நான்கையும் அசைகளெனக்கோடலுமொன்று. (80)
534. கலையர வல்கு லார்தங் காதலிற் கழுமல் காமன்
வலைமலை யனைய செல்வ நரகத்து வீழ்க்கு மாய
மலைவிலா நெறியை விட்டு மயங்கினார் நெறியைப் பற்றின்
நிலையிலா மாற்றி னின்று சுழறற்கு நிமித்த மென்றான்.
(இ-ள்.)(அவ்வாறு உதயமாகவே) காமன்வலை - மன்மதனுடைய
வலையாகிய, கலை - மேகலையையணிந்த, அரவு - ஸர்ப்பத்தினது
பணாமுடி போன்ற, அல்குலார்தம் - அல்குலினையடைய
ஸ்த்ரீமார்களினுடைய, காதலில் - ஆசையில், |