வைசயந்தன் முத்திச்சருக்கம் 25


 

வையகம்  -  இந்த  உலகிலுள்ளோர்,  ஏத்த  -  தோத்திரம் பண்ண,
வளர்ந்த நாள் - வளர்ந்த காலத்தில், எ-று.                   (53)

வேறு.

 54. புண்ணிய முதித்துழிப் போக மெய்துமா
    லண்ணல்சஞ் சயந்தனற் குமர னாயுழி
    விண்ணுறை திருவனாள் வேள்வி நீர்மையாற்
    பண்ணமை மொழியளோர் பாவை யெய்தினாள்.

     (இ-ள்) புண்ணியம் - பூர்வத்தில் செய்யப்பட்ட புண்ணியமானது,
உதித்துழி  -  தோன்றிய காலத்தில்,  போகம்  -  போகோப  போக
சௌக்கியம்,   எய்தும்  -  அடையும்   (அதுபோல்),   அண்ணல் -
பெருமையிற் சிறந்தவனாகிய, சஞ்சயந்தன் - சஞ்சயந்தனானவன், நல் -
நன்மையாகிய, குமரனாயுழி - யௌவனகுமாரனான காலத்தில், வேள்வி
நீர்மையால்   -   ஒளபாஸன    விதிக்கிரமத்தால்,   விண்ணுறை  -
தேவலோகத்தில்   வசிக்கும்படியான,  திருவனாள்  -  இலக்குமிக்குச்
சமானமுள்ளவளாகிய,    பண்ணமை    -   கீதமமைந்த,   மொழி -
வசனத்தையுடைய, ஓர் - ஒப்பற்ற, பாவையள் - சித்திரப்பாவைபோன்ற
மாதானவள், எய்தினாள் - (அவனை) அடைந்தாள், எ-று.

     ஆல் - அசை.                                     (54)

 55. வண்டுபூ மலர்ந்துழி மதுவை யுண்பதிற்
    றொண்டைவா யவணலம் பருகு நாளவன்
    வண்டிரை வலம்புரி மணியை யீன்றவா
    புண்டவழ் வேற்கணாள் புதல்வற் பெற்றனள்.

     (இ-ள்) பூ - பூவானது, மலர்ந்துழி - மலர்ந்த விடத்தில், மதுவை
-  அதிலுள்ள   மதுவை,  வண்டு   -   வண்டானது,  உண்பதின் -
உண்பதுபோல்,  தொண்டை - கோவைக்கனிபோன்ற, வாய் - (சிவந்த)
வாயையுடைய,  அவள்  -  அந்த  ஸ்த்ரீயினிடத்துண்டாகிய,  நலம் -
இன்பத்தை, அவன் - அந்தச் சஞ்சயந்த குமாரனானவன், பருகுநாள் -
அனுபவிக்கும் காலத்தில்,   வண்  -  வளப்பம்  பொருந்திய, திரை -
அலைகளையுடைய(கடலிலுண்டாகிய), வலம்புரி - வலம்புரிச் சங்கானது,
மணியை - முத்துமணியை, ஈன்றவா - பெற்றதுபோல், புண் - பகைவர்
மாம்சத்திலே,  தவழ் - பாய்ந்து  தவழ்கின்ற,  வேல் - வேல்போன்ற,
கணாள் - கண்களையுடைய  அம்மாது,  புதல்வன் - ஒரு புத்திரனை,
பெற்றனள் - பெற்றாள், எ-று.                              (55)