|  
       யையுடைய, விமானமதில் - தேவவிமானத்தில், பெரிய வீரன் - மிகுந்த 
        ஆத்ம   விரியத்தை   யனுஷ்டிக்கும்  அந்த ஸிம்மச்சந்திர முனிவன், 
        பிரதியங்கரத்தினை  - பிரீதிங்கரமென்று   பெயர்பெற்ற விமானத்தில், 
        மருவினான்    - ப்ரீதிங்கரனென்னும்   அஹமிந்திர     தேவனாய்ச் 
        சேர்ந்தான், எ-று.	 
           மற்று - அசை.								                                   (99)	 
      553.	முப்பத்தோ ராழியான் முடிந்த வாயுக 
             முப்பத்தோ ராயிரத் தாண்டு விட்டுணா 
             முப்பத்தோர் பக்கத்தைக் கடந்து யிர்த்திடா 
             முப்பத்தோர் நான்கதி சயரை வாழ்த்துமே.	 
           (இ-ள்.)   (அவ்வாறு   சேர்ந்தபின்)    முப்பத்தோராழியால் - 
        முப்பத்தொரு   கடல்களின்    கணக்கால், முடிந்த - தனக்கேற்பட்ட, 
        ஆயுகம்    -    பரமாயுஷ்யத்தில்,     முப்பத்தோராயிரத்தாண்டு - 
        முப்பத்தோராயிரம்   வருஷங்களை,   விட்டு   -  தாண்டி, உணா - 
        மனஸாஹாரத்தை        பொஜித்து,       முப்பத்தோர்பக்கத்தை - 
        பதினைந்தரைமாசத்தை,   கடந்து  - தாண்டி, உயிர்த்திடா - உச்வாஸ 
        நிச்வாஸத்தைச் செய்து,  முப்பத்தோர் நான்கதிசயரை - முப்பத்தினாலு 
        அதிசயங்களையுடைய    தீர்த்தங்கர     பரமதேவரை,  வாழ்த்தும் - 
        ஸ்தோத்திரம் செய்பவனானான், எ-று.					                          (100)	 
      554.	அவதியா னரகமா றாவ தாய்ந்திடா 
             யுவதியால் வரும்பய னொன்று மின்றியே 
             சிவகதி யவர்க்குப்போ லிவர்க்கு நல்வினை 
             யவதியி னுதயத்தா லாகு மின்பமே.	 
           (இ-ள்.)  அவதியால் - அவதிஜ்  ஞானத்தால், நரகமாறாவது - 
        ஆறாநரகபரியந்தம்   (உள்ளவை),   ஆய்ந்திடா   -   அறியப்பட்டு, 
        யுவதியால்  - ஸ்த்ரீமார்களால், வரும் - வருகின்ற, பயன் - காமபயன், 
        ஒன்றும் - யாதொன்றும், இன்றி - இல்லாமல், சிவகதி யவர்க்குப்போல் 
        - மோட்சகதியையுற்ற  ஸித்த பரமேஷ்டிகளுக்குள்ளதுபோல, இவர்க்கு 
        - இவ்வாறான இந்த அஹமிந்திர தேவர்களுக்கு, அவதியன்உதயத்தால் 
        - அவதிஜ்ஞான  உதயத்தால், இன்பம் - ஸௌக்கியமானது, ஆகும் - 
        ஏற்படும், எ-று.											                                         (101)	 
      555.	அஞ்சிறப் பயர்வுழி யறிவ னாணையா 
             லஞ்சிரண் டடிநடந் திறைஞ்ச லல்லது 
             அஞ்சிவந் தொருவர்தம் மாணை யிற்செலா 
             ரஞ்சொலா ரின்மையா ரகநல் லிந்திரர்.  |