புணர்ந்தவை பிரியும்
போழ்தும் புதியவந் தடையும் போழ்து
முணர்ந்துறு கவலை காத லுள்புகா ருள்ள மிக்கார்.
(இ-ள்.) (மேலும்)
கணங்கணந்தோறும் - ஒவ்வொரு
சமயத்திலும், வேறாம் - நிலையில்லாமல் பிரிந்து போகும்படியான,
உடம்பினை - புத்கலரூபமான சரீரத்தை, கண்டு - பார்த்திருந்தும்,
பின்னும் - பிறகும், மணந்து -
சேர்ந்து, உடன் - உடனே,
பிரிந்தவற்றுக்கு - பிரிந்துபோகின்ற அவைகளுக்கு, மதியிலாதார்
-
புத்தியில்லாத அஞ்ஞானிகள், இரங்குவார்
- வருந்துவார்கள்,
புணர்ந்தவை - சேரப்பட்ட புத்கலரூபமான சரீராதிகள்,
பிரியும்
போழ்தும் - பிரிகின்ற காலத்திலும், புதிய வந்தடையும் போழ்தும் -
நுதனமானவைகள் வந்தடைகின்ற காலத்திலும்,
உணர்ந்து -
அவற்றின் ஸ்வரூபங்களையறிந்து, உறு - அவற்றினாலுண்டாகிய,
கவலையுள் - வருத்தத்தினுள்ளும், காதலுள் - வாஞ்சையினுள்ளும்,
உள்ள மிக்கார் - புத்தியிற்சிறந்த
பெரியோர்கள் (அதாவது :
ஸம்மியக் ஞானிகள்), புகார் -
சேரார்கள், (அதாவது :
அழிவுக்கிரங்குதலும், தோற்றத்திற்கு மகிழ்தலும்
செய்யார்கள்),
எ-று.
(8)
569. அறம்பொரு ளின்ப மூன்றி லாதியா லிரண்டு மாகும்
இறந்ததற் கிரங்கி னாலும் யாதொன்றும் பின்னை
யெய்தா
பிறந்துழி பெரிய துன்பம் பிணிக்குநல் வினையை
யாக்கு
மறம்புணர்ந் திறைவன் பாதஞ் சிறப்பினோ டடைக வென்றார்.
(இ-ள்.) அறம்
- தருமமும், பொருள் - பொருளும், இன்பம் -
சௌக்கியமுமாகிய, மூன்றில் - இந்த மூன்றுகளில்,
ஆதியால் -
முதலில் சொல்லப்பட்ட தர்மத்தால், இரண்டும் - மற்ற
பொருளும்
சுகமுமாகிய விரண்டும், ஆகும் - உண்டாகும், இறந்ததற்கு - இதற்கு
முன் இறந்து போனவைகளுக்கு, இரங்கினாலும் - வருந்தினாலும்,
யாதொன்றும் - நீங்கிப்போகும் தன்மையை யுடைய
யாதொரு
வஸ்துவும், பின்னை - பிறகு, எய்தா - நீங்காமல் அடையமாட்டாது,
(அவ்விதமாயிருக்க), அதனையறியாது வருத்தமுற்றால்), பிறந்துழி
-
மறுபடி வேறு பிறவியையுற்றபோதும், பெரியதுன்பம் - (அதனால்)
பெரிய துக்கம், பிணிக்கும் - கட்டுப்படுத்தும்,
(ஆகையால்)
நல்வினையை - புண்ணிய வினையை, ஆக்கும்
- உண்டு
பண்ணும்படியான, அறம் - தருமத்தை,
புணர்ந்து - சேர்ந்து,
இறைவன் - ஸர்வஜ்ஞனது, பாதம் - பாதத்தை, சிறப்பினோடு
-
பூஜையாகிய குணஸ்துதியுடன், அடைக - சேர்வாயாக, என்றார் -
என்றும் போதித்தார்கள், எ-று. (9)
570. என்றவ ருரைத்த மாற்றத் தெரியுறு மெழுகு நீருட்
சென்றது போலத் திண்ணென் றிறைவனற் சிறப்போ டொன்றி
நின்றநா ளுலப்ப மின்னி னீங்கினான் நிலத்தைச்
சேர்ந்தா
னன்றைய நிதானத் தாலே யரிவையா யுரகர் கோவே. |