கங்கை - கங்கையும், சிந்து -
சிந்துவும் (அவற்றின் பெயரையே
பெயராக வகித்த வியந்தரதேவஸ்த்ரீகளின் இருப்பிடமுமாகி), வந்து
அடியடைந்த - வந்து தன் கீழ் அடியில் சேர்ந்திராநின்றதாகிய,
குன்றம் - இவ்விஜயார்த்த பர்வதமானது, பாழி - பெருமையையுடைய,
அம் - அழகிய, தடக்கை - தியாகம் கொடுக்கும்படியான பெரிய
கைகளையுடைய, வேந்தன் - அரசனென்னும், பரதன் போன்று
-
ஷட்கண்டாதிபதியாகிய பரதராஜச் சக்கர வர்த்தியைப்போல், நின்று -
நிலை பெற்று, இலங்கும் - விளங்கும், எ-று.
இதில் சொன்ன
பொருள் பரதராஜ சக்கரவர்த்திக்கும்
பொருந்துகின்றது; ஆகையால் இம்மலையைப்
பரதராஜனுக்கு
உவமையாக வருணித்தார் ஆசிரியர்.
(12)
573. அன்பது மிருபத் தைந்தும் புகையகன் றுயர்ந்து நீள
மொன்பது மொன்று மாய வாயிரத் ததிக மோடி
யைம்பதும் பத்தை மேற்சென் றங்கிரு மருங்கும் புக்கு
விஞ்சைய ருலக மாகிப் பப்பத்து வீழ்ந்த வெற்பின்.
(இ-ள்.) (இன்னும்)
வெற்பின் - அம்மலையில், அன்பது
புகையகன்றும் - தெற்கு வடக்கில் அன்பது யோஜனை யகலமாக
விசாலித்தும், இருபத்தைந்து புகையுயர்ந்தும் -
இருபத்தைந்து
யோஜனை உன்னதமாக வுயர்ந்தும், நீளம் -
கிழக்கு மேற்கு
நீளமானது, ஒன்பது மொன்றுமாய வாயிரத்ததிகம் -
தக்ஷிண
பாரிசத்தில் ஒன்பதினாயிரம் யோஜனைக்குக் கொஞ்சம் அதிகமாயும்
உத்தரபாரி சத்தில் பதினாயிரம் யோஜனைக்குக்
கொஞ்சம்
அதிகமாகவும், ஓடி - நீண்டும், அங்கு - அவ்விடத்தில், இருமருங்கும்
- இரண்டு பக்கத்திலும், ஐம்பதும் பத்தும் மேற்சென்று
- ஐம்பது
யோஜனையும் பத்து யோஜனையும் மேலே செல்ல (அதாவது
:
ஐம்பது யோஜனை அகலமாகவும் பத்து யோஜனை உயரமாகவும்
மேலே வியாபிக்க), பப்பத்து - பத்துப்பத்து யோஜனைகள், புக்கு
-
அடைந்து, வீழ்ந்த - ஒவ்வொன்றுக்கும் அகலமாக உத்தரதக்ஷிண
பாரிசங்களில் தங்கி இருபிரிவாகத் தோற்றிய, விஞ்சையருலகமாகி -
வித்தியாதர லோகமாக, எ-று.
புகை -
இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது. ஐம்பதும்
என்பதிலுள்ள உம்மை இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது. பத்தை -
என்பதில் ஐ - சாரியை. இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (13)
574. நின்றமுப் பதும்பத் தேறி நெறியினாற் சேடி யாகிச்
சென்றன சக்க வாலர் வியோகர புரங்க ளாகு
மன்றியக் குன்றிற் பத்து மைந்துயர் சூளி யாமே
லொன்றிநின் றொளிருங் கூடம் மகுடம்போ லொன்ப தாமே. |