(இ-ள்.)
(இன்னும் இவ்வித்தியாதரர்கள்), எழுமுழம் - ஏழுமுழ
உன்னதத்திற்குக் கீழ், இழிவதும் - குறைவதும், வில்லைஞ்ஞூற்றில் -
ஐஞ்ஞூறுவில்லு யாத்திற்குமேல், ஏற்றும் - உயர்வதும்,
இல்லை -
கிடையாது, வழுவிலா - குற்றமில்லாத, வருடநூறு
- நூறு
வருஷாயுஷ்யத்திற்கு, கீழ் - கீழே, இல்லை
- குறைவதுமில்லை,
புவ்வகோடியினில் - பூர்வகோடியாயுஷ்யத்தில், மேல்
- மேலே,
இல்லை - உயர்வதுமில்லை, எழுமுழம் - ஏழுமுழ உன்னதமானது,
(அவஸர்ப்பிணியின் தீக்காலம் தீத்தீக்காலம் உத்ஸர்ப்பிணியின்
தீத்தீக்காலம் தீக்காலம் ஆகிய), ஆயிரத்தாண்டெண்பத்து நான்கு -
எண்பத்து நாலாயிரம் வருஷம், நிற்கும் -
ஸ்திரமாயிருக்கும்,
முழுவிலைஞ்ஞூறு - நிறைந்த ஐஞ்ஞூறு வில்லுன்னதமானது,
கோடாகோடி மூவாறுமுன்னீர் நிற்கும் - பதினெட்டுக் கோடாகோடி
கடற்காலம் ஸ்திரமாகவிருப்பதாகும், எ-று.
(இதனால் உத்ஸர்ப்பிணி
அவஸர்ப்பிணிகளில் நாற்பத்தீராயிரம்
வருடம் குறைந்த ஒரு கோடாகோடி கடற்காலம்
அளவுள்ள
நற்றீக்காலம் தீநற்காலம் ஆகியவைகளில்
அவர்கள்
ஏற்றிழிவையுடையவர்களா யிருப்பார்கள் என்பது
பெறப்படும்).
இல்லை, நிற்கும் என்பன இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டன. (16)
577. நாகத்தைச் சூழ்ந்து நாக நாகத்தைப் போல நிற்கும்
நாகத்தை விழுங்கி நாகம் நாகத்தைச் சூழ்ந்த வாங்கு
நாகத்தை யடைந்த நாகர் நாகத்தை யென்று நண்ணார்
நாகத்துக் கிறைவ வென்றா னாகத்துக் கிறைவன் றானே.
(இ-ள்.) நாகத்துக்கிறைவ
- பவணலோகத்துக் கதிபதியாகிய
தரணேந்திரனே!, நாகத்தை - இவ்விஜயார்த்த பர்வதத்தை, சூழ்ந்து -
எப்பக்கத்திலும் சூழ்ந்து கொண்டு, நாகம் -
யானைகளானவை,
நாகத்தைப்போல - மேகதுண்டங்களைப் போல் (அல்லது வேறு சில
பர்வதங்களைப்போல்), நிற்கும் -
நிற்பனவாம், நாகத்தை -
ஆகாயத்தை, விழுங்கி - மறைத்து, நாகம் - புன்னாக விருட்சமானது,
நாகத்தை - அவ்விஜயார்த்த பர்வதத்தை, சூழ்ந்த - சூழ்ந்திரா நின்ற,
ஆங்கு - அவ்விடத்தில் - நாகத்தை - அப்பர்வதத்தை, அடைந்த -
சேர்ந்த, நாகர் - தேவர்கள், நாகத்தை - தேவலோகத்தை, என்றும் -
எப்பொழுதும், நண்ணார் - நீங்கியடைய மாட்டார்கள்,
என்றான்
நரகத்துக்கிறைவன்றான் - என்று தேவலோகத்து
லாந்தவ
கல்பாதிபதியாகிய ஆதித்யாபதேவன் சொன்னான், எ-று. (17)
578. மறுவிலாப் பளிங்கிற் பாய்ந்த மரகதக் கதிரை மான்க
ளறுகெனக் கறித்துக் கான னீரெனச் செல்வ போலும்
வெறிமலர் துதைந்த நீல மணித்தலத் தகத்தைச் சென்று
குறுகுவர் குவளை வட்ட மென்றுகோல் வளையி னாரே.
|