596. முத்தணி முகிண்முலை முளரி வாண்முகத்
தத்தையங் கிளவியைத் தருச கனெனும்
வித்தக னளகையான் வேந்தற் கீந்தனர்
முத்திபெற் றாரையொத் தானம் மூர்த்தியே.
(இ-ள்.) முத்தணி
- முத்துமாலைகளை யணிந்த, முகிழ் -
தாமரை மொக்குப்போன்ற, முலை - ஸ்தனங்களையும்,
முளரி -
தாமரை மலர்போன்ற, வாள் -
ஒளிபெற்ற, முகம் -
முகத்தையுமுடைய, தத்தை - கிளிப்பிள்ளை வசனத்தைப் போன்ற,
அம் - அழகிய, கிளவியை - வசனம்பொருந்திய இந்த ஸ்ரீதரையை,
தருசகனெனும் - தர்சகனென்று பெயர் கூறப்பட்ட, வித்தகன்
-
சாமர்த்திய புருஷனும், அளகையான் - அளகைக்கதிபனும், (ஆகிய),
வேந்தற்கு - இராஜனுக்கு, (அந்த ஸ்ரீதரையின் தாய்தந்தையர்), ஈந்தனர்
- விவாஹ விதியால் மணஞ் செய்து கொடுத்தார்கள், அம்மூர்த்தி
-
அவ்வளாகாபுரியரசனும், முத்திபெற்றாரை யொத்தான்
- முக்தி
பெற்றவர்களைப்போலவளிடத்தில் நீங்காத இன்பத்தையடைந்தான்,
எ-று.
(36)
597. அளகமுங் குழல்களுந் திருத்தி யம்மலை
யிளமயி லனையவ ளோடவ் வேந்தறா
னுளமலி யுவகையி னோடு நாளினால்
வளரொளி வைடூரியப் பிரபை வானவன்.
(இ-ள்.) அளகமும் -
ஐம்பாலென்னுங் கூந்தலில் பின்னி
விடுதலாகிய பனிச்சையும், குழல்களும் -
சுருட்டிமுடிக்கும்
முடிகளுமாகிய அலங்காரங்களை, திருத்தி -திருந்தச்செய்து, அம்மலை
- அந்த விஜயார்த்த பர்வதத்தில், இளம் - இளமைப் பருவமுடைய,
மயிலனையவளோடு - ஆண்மயிலுக்குச் சமானமான
சரீரச்
சாயலையுடையவளாய் உலாவிய
அந்த ஸ்ரீதரையோடு,
அவ்வேந்தல்தான் -
பெருமையிற் சிறந்தவனாகிய
அவ்வளகாபுராதிபதியானவன், உளம் - மனதில், மலி
- நிறைந்த,
உவகையின் - சந்தோஷத்துடன், (கூடி), ஓடுநாள்
- செல்கின்ற
காலத்தில், வளரொளி - நீண்ட கிரணத்தையுடைய, வைடூரியப் பிரபை
- வைடூரியப் பிரபை விமானத்திலிராநின்ற, வானவன் - வைடூரியப்
பிரபை தேவனானவன், எ-று.
நாளினால் என்பதில், இன், ஆல்
- அசைகள். (37)
598. இறைவளை யிராமைதன் னிளைய காளைமேற்
பிறவியி லென்வயிற் பிறக்கு மாய்விடி
னிறைதவப் பயனெனா நினைத்த சிந்தையின்
மறுவிலாத் திருவினாள் வயிற்றுட் டோன்றினான்.
|