மானமெல் லார்க்கு மொத்து மலர்மலி
கிடங்கு பின்னா
மானமில் லாத வல்லி வனத்திடை மலர்க்கை யேந்தி.
(இ-ள்) வானவில்
- இந்திரதனுசினது ஒளியையுடைய
தூளிசாலமென்னும் முதல் மதிலை, கடந்து - தாண்டி, மானபீடத்தை -
அவ்விடத்தில் அளவோடுள்ள பலிபீடத்தை, வணங்கி - நமஸ்கரித்து,
வாழ்த்தி - தோத்திரம்பண்ணி, மான தம்பத்தை - (அதற்குமேல் அந்த
ப்ராசாத சைத்ய பூமியாகிய முதல் பூமியின் பேர்பாதியில் நாலு மகா
திக்குகளிலும் இரா நின்ற) மானஸ்தம்பத்தை, எய்தி -
அடைந்து,
வலங்கொண்டு - பிரதட்சணம் பண்ணி, பணிந்து - வணங்கி, போகி -
(அப்பூமியின் மற்ற பாதி தூரமும்) சென்று, மானம் - அளவானது,
எல்லார்க்கும் - யாவர்களுக்கும், ஒத்து - சமத்துவமாகி, மலர்மலி
-
புஷ்பங்களினால் நிறைந்த, கிடங்கு - அகழ்ப்
பூமியினிடத்தும்,
போகி - சென்று, பின்னால் - அதற்கப்பால் இராநின்ற, மானமில்லாத
- அளவில்லாத, வல்லி - புஷ்பக் கொடிகளையுடைய, வனத்திடை -
வல்லி வனத்தில், மலர் - புஷ்பங்களை, கை - கையில்,
ஏந்தி -
தரித்துக்கொண்டு, எ-று. (60)
61. கோபுரஞ் சுரும்புண் சோலைக் கோபுரங் கொடியின் பந்தி
கோபுரங் காவுஞ் செம்பொன் மாளிகைக் குழுவுங் குன்றா
மாபுரி யனைய தூபை மணிமுத்த மணலின் முற்ற
நூபுரத் தரவ மார்ப்ப நுவலிய கடந்து புக்கான்.
(இ-ள்)
கோபுரம் - உதயதரமென்னும் மதிலையும்
கோபுரத்தையும், சுரும்புண்சோலை - (அம்மதிலினுட்
பாகத்தில்)
வண்டுகளானவை மதுவை உண்ணும் தோப்புகளையுடைய
வனபூமியையும், கோபுரம் -
பிரீதிதரமென்னும் மதிலையுங்
கோபுரத்தையும், கொடியின் பந்தி -
அதனுள் த்வஜவரிசைகள்
இராநின்ற த்வஜபூமியையும், கோபுரம் - கல்யாணதர மென்னும்
மதிலையுங் கோபுரத்தையும், காவும் - அதற்குள் உள்ள கற்பகவிருஷ
பூமியையும், செம்பொன் - சிவந்த பொன்னாலாகிய,
மாளிகைக்
குழுவும் - உப்பரிகையின் கூட்டங்களையுடைய
கிரஹாங்கண
பூமியையும், குன்றா - குறைவில்லாத, மாபுரியனைய - பெரிதாகிய
பட்டணத்துக்குச் சமானமாகிய, தூபை -
ஸ்தூபைகளையும்,
மணிமுத்தம் - முத்துமணிகளாகிற, மணலின் - மணல்களையுடைய,
முற்றம் - வாசல்களில், நூபுரத்து - பாதச்சிலம்புகளின்,
அரவம் -
சப்தம், ஆர்ப்ப - சப்திக்க, நுவலிய -
சொல்லப்பட்ட சப்த
பூமிகளை, கடந்து - தாண்டி, புக்கான் - உள்ளே போயடைந்தான்,
எ-று.
இதனால் சப்த
பூமிகளையும் மும்மதில்கள் கோபுரம்
முதலியவற்றையும் தாண்டிச் சென்றான் என்பது பெறப்படும். (61)
62. பத்தொடு பதினா றாய பைம்பொனன் மணிய வற்றிற்
சித்திரத் தியற்றப் பட்ட திருநிலை யத்தை யெய்தி |