னுடைய, இடை - இடையேயாகும், துடைகள்
- துடைகளிரண்டும்,
மாளிகை - உப்பரிகையினுடைய, தூண்கள்போலும் - ஸ்தம்பங்களை
நிகர்க்கும், நடை - நடை யானது,
வ ிடை - வீருஷபத்தினது,
ஒதுக்கமாம் - நடையேயாகும், காலடி - பாதங்களின்
அடிகள்,
நளினம் - தாமரை மலர்களேயாகும், (மேலும் அவன்), அடையலர்க்கு
- சத்துரு ராஜாக்களுக்கு, அரியோடு -
சிம்மத்தோடு, கூற்றம் -
இயமனும், அன்னன் - ஒப்பவனாவான், எ-று. (48)
609. கலைகுண நூல்களிற் காம னன்னவன்
மலைமிசை மன்னர்தங் கன்னி வல்லிகண்
முலைமலி போகத்தின் மொய்ம்பன் மூழ்குநா
ணிலையின்மை சூரியா வருத்த னெண்ணினான்.
(இ-ள்.) கலை -
அறுபத்துநாலு கலைஞானமாகிற, குணம் -
மேன்மை பொருந்திய, நூல்களில் - சாஸ்திரங்களில், மொய்ம்பன் -
வல்லவனும், காமனன்னவன் - அழகில் மன்மதனை நிகர்த்தவனும்
ஆகிய இந்தக் கிரணவேகன், மலை மிசை
- அவ்விஜயார்த்த
பர்வதத்திலுள்ள, மன்னர்தம் - ராஜாக்களுடைய, கன்னி வல்லிகள் -
புஷ்பக்கொடிபோன்ற இளமைப்பருவமுடைய புத்ரிகளின், முலை
மலி - ஸ்தனங்களில் நிறைந்திராநின்ற, போகத்தின் - போகத்திலே,
மூழ்குநாள் - அழுந்தி அனுபவிக்கின்ற காலத்தில், சூரியா வருத்தன்
- சூரியாவர்த்த மஹாராஜான், நிலையின்மை -
ஸம்ஸாரத்தினது
அனித்திய ஸ்வரூபத்தை, எண்ணினான் - நினைத்தான், எ-று. (49)
610. களிற்றுனுக் கரசனென் றாலுங் காலவை
யளற்றினுட் செறிந்தபோ தாவ தில்லைநம்
வெளிற்றினிற் கட்டிய வினையின் வெந்துய
ரளற்றின்வீழ் போதுமொன் றாவ தில்லையே.
(இ-ள்.)(அவ்வாறு நினைத்து ஒரு
யானையானது), களிற்றினுக்கு -
யானைகளுக்கெல்லாம், அரசனென்றாலும் - ராஜாவாகிப்
பலம்
பொருந்திய பட்டத்து யானையாயிருந்தாலும், காலவை - கால்கள்,
அளற்றினுள் - சேற்றில், செறிந்தபோது - புதைந்தபோது, ஆவதில்லை
- அதனின்றும் வெளியேறுதல் அதனால்
முடிவதில்லை,
(அதைப்போல), நம் - நம்முடைய, வெளிற்றினில் - அஞ்ஞானத்தால்,
கட்டிய - நம்மைப் பந்தித்த, வினையின் - கர்மங்களினால், வெம் -
வெப்பம் பொருந்திய, துயர் - துக்கமாகிற, அளற்றின -
சேற்றில்,
வீழ்போதும் - நாம் வீழ்கின்ற காலத்திலும்,
ஆவது ஒன்று -
(அதனின்றும் நம்மை வெளியேற்றிக் கொள்ள நம்மால்) ஆவதாகிய
ஒரு காரியம், இல்லை - கிடையாது, எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.
(50) |