மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 281


 

 611. மடந்தையர் மனத்தினுங் கடிது மாய்ந்திடு1
    முடம்பொடு கிளையென வுள்ளம் வைத்தவன்
    றடங்கண்வெம் முலையவர் சூழச் சாம்பிய
    மடங்கல்போல் மலைநின்று நிலத்தின் வந்தனன்.

    (இ-ள்.)  உடம்பொடு  -  இச்சரீரத்தோடு, கிளை - பந்துத்வமும்,
(ஆகிய இந்த அனுபசரித வுபசரித அசத்பூதங்களெல்லாம்), மடந்தையர்
- ஸ்திரீகளது, மனத்தினும் - மனதைப்பார்க்கிலும், கடிது - சீக்கிரமாக,
மாய்ந்திடும் - நிலையாமல் நீங்கிப்போவனவாம், என - என்று, அவன்
- அச்சூர்யாவருத்தன்,   உள்ளம்   -   மனதில், வைத்து - (சம்சாரம்
அனித்யஸ்வரூபமென்பதை)    ஸ்திரம்செய்து,   தடம்   -   விசாலம்
பொருந்திய, கண் - கண்களையும், வெம் - விருப்பத்தைச் செய்கின்ற,
முலையவர் - ஸ்தனங்களையுமுடைய ஸ்த்ரீமார்கள், சூழ - சூழ்ந்துவர,
சாம்பிய - நொந்த, மடங்கல்போல் - சிம்மத்தைப்போல, மலைநின்று -
விஜயார்த்த   பர்வதத்தினின்றும்,   (இறங்கி),   நிலத்தின் - பூமியில்,
வந்தனன் - வந்தான், எ-று.                                (51)

வேறு.

 612. மலைவின் மாதவன் மாமுனிச் சந்திரன்
     றலைவ னன்னவன் றன்சர ணாம்புயம்
     நிலனு றப்பணிந் தேத்திநின் றெண்வினைப்
     பலமெ னோபணிக் கென்று பணித்தனன்.

     (இ-ள்.)  (அவ்வாறு வந்தவன்) மலைவில் - மாறுபாடில்லாத, மா
- பெருமை   பொருந்திய,   தவன்  - தபத்தையுடையவனாகிய, மா -
சிறந்த,   முனிச்சந்திரன் - முனிச்சந்திரனென்னும்,  தலைவனன்னவன்
தன் - ஸர்வஜ்ஞனை   நிகர்த்த   முனிவரனது, சரனாம்புயம் - பாதத்
தாமரையில்,   நிலனுற - தனது சிரம் முதலாகிய அங்கங்கள் பூமியில்
படும்படி, பணிந்து - தாழ்ந்து வணங்கி, ஏத்தி - ஸ்தோத்திரம் பண்ணி
(பிறகு),   நின்று   -   எழுந்து   எதிரில்   நின்று,    எண்வினை -
அஷ்டகருமங்களின்,  பலன் - பலனானது, எனோ -  எவ்வகைத்தோ,
பணிக்கென்று - அதை  எனக்குச்   சொல்லுக என்று, பணித்தனன் -
கேட்டான், எ-று.                                        (52)

வேறு.

 613. அறிவொடா லோகந் தன்னை யாரிருள் போல நின்று
     மறுதலைச் செய்யும் ஞான காட்சியா வரணம் வாளி
     னெறியும்வா யிரண்டி னொன்றி னஞ்சொன்றி னமிர்தம் பூசிச்
     செறியநா வைத்த லொக்குந் தீயநல் வேதனீயம்.

___________________________________________

 1வீந்திடும் என்றும் பாடபேதமுண்டு.