286மேருமந்தர புராணம்  


 

போல,  வனப்பின்  - அழகு  பொருந்திய,  காவிரண்டு  -  இரண்டு
உத்யானங்கள், சூழ்ந்த - சூழ்ந்துள்ளன, எ-று.                (62)

 622. வேதிகைத் தோர ணங்கள் வேய்ந்தன காந்தி யார்ந்த
     சேதிய மரங்க ணான்கு திசைதொறுஞ் செறிந்த காவு
     ளாதியோ டந்த மில்லா வறிவரன் கோயி லெய்தும்
     வீதிக டோறும் நான்கு கோபுரம் விளங்கு நின்றே.

     (இ-ள்.)   வேதிகை   -   அந்த   ஆலயத்திலுள்ள பீடத்தை,
தோரணங்கள்  -  தோரணங்களானவை,  வேய்ந்தன - சூழ்ந்துள்ளன,
காந்தியார்ந்த  -  பிரகாசம்   நிறைந்த,   சேதியமரங்கள்  -  சைத்ய
விருட்சங்கள்,   நான்குதிசை   தொறும் - சதுர் மஹாதிக்குகடோறும்,
செறிந்த   -   சேர்ந்திராநின்றன,  காவுள் - அந்தச் சைத்யாலத்தைச்
சூழ்ந்திராநின்ற    உத்யான   வனத்தில்,     ஆதியோடந்தமில்லா -
ஆதியந்தர   ஹிதமாகி   அக்கிருத்திமமாகிய,  அறிவரன் கோயில் -
ஜினசைத்யாலயத்தை,   எய்தும் - அடையும்படியான, நான்கு வீதிகள்
தோறும்  -  சதுர்   மஹா   வீதிகள்தோறும்,   நான்கு  கோபுரம் -
(வீதிக்கொரு     கோபுரமாக)   நான்கு    கோபுரங்கள்,   நின்று -
நிலைபெற்று, விளங்கும் - பிரகாசிக்கும், எ-று.

     நான்கு - இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது.           (62)

 623. கனகநன் மணியுங் கம்பங் குமுதமும் பாலி காலு
     மனநிறை பூத மாடும் பாவைகள் கூட சாலை
     வினைவெல்லும் வேத மூன்றும் புராணமும் மெழுதி வெய்யோன்
     றனதிடம் போன்று வென்றோர் தலைவன திருக்கை யாமே.

     (இ-ள்.)   கனக     நன்மணியும்    -    பொன்னும்  நல்ல
இரத்தினங்களும்,  கம்பம்  குமுதமும்  பாலிகானும் - ஸ்தம்பங்களும்
குமுதவீத்துகளும் பாலிகால்களுமாகிய போதிகைகளுமாம் (அதாவது :
அவ்வாலயத்தில்    ஸ்தம்பங்கள்    பொன்னாலும்    போதிகைகள்
இரத்தினங்களாலும்       செய்யப்பட்டனவாம்),       கூடசாலை -
கூடமென்னும்    வெளிமண்டபம்,   மனம்நிறை - மனப்பூர்த்தியான,
பூதம்   -   பவித்திரமாகிய,   ஆடும்  -  ஆடுகின்ற, பாவைகள் -
சித்திரப்பாவைகளின்    வடிவங்கள்    விளங்குவதாம்  (அதாவது :
மேற்படி   வடிவங்கள்  எழுதப்பட்டதாம்),  வினை  - கர்மங்களை,
வெல்லும்  -  கெடுக்கும்படியான,  வேதமூன்றும் - அங்கம்  பூர்வம்
பாஹ்யமென்னும்   ஆகமத்திரயங்களும்,   எழுதி  -  எழுதப்பட்டு,
வெய்யோன்றனது  -  சூர்யனுடைய,  இடம்போன்று - ஸ்தானமாகிய
விமானம்போல்,  வென்றோர்  தலைவனது  - ஸகல  கர்மங்களையும்
ஜயித்தவராகிய     இறைவரது,    இருக்கையாம்    -    ஸ்தானம்
விளக்குவதாகும், எ-று.                                   (63)