624. ஆயதங் காத மாகி யதனரை யகல மாகி
யாயதங் கால்கு றைந்த துயரமா யமல மாகி
நீதியா னின்ற கந்த குடிகளு நூற்றெட் டாகி
வாய்தலோர் மூன்று முன்பு மண்டபம் பலவு மாமே.
(இ-ள்.) (இன்னும்
அங்கே), ஆயதம் - நீளமானது, காதமாகி -
ஒரு காதமாகி, அகலம் - அகலமானது, அதனரை - அந்த
ஒரு
காதத்தில் பாதியாகிய அரைக்காதம், ஆகி -
ஆய், ஆயதம் -
நீளத்தில், கால் குறைந்தது - கால் குறைந்தது போக முக்கால் காதம்,
உயரமாய் - உன்னதமாகி, அகலமாகி - நிர்மலகரமாகி, நீதியால்
-
வரிசைக்கிரமத்தால், நின்ற - வரிசையாக நிலைபெற்ற, கந்த குடிகளும்
- கந்த குடி மண்டபங்களும், நூற்றெட்டாகி - நூற்றெட்டு என்கிற
கணக்கையுடையனவாய், வாய்தலோர் மூன்று -
மூன்று வாசல்
வழிகளையுடையனவாய், முன்பு -
எதிரில், மண்டபம் -
மண்டபங்களானவை,பலவுமாகும் - அனேகமாகவும்
விளங்கும்,
எ-று. (64)
வேறு.
625. தூபைசே தியமரம் வைச யந்தையாம்
மாபெருங் கொடிமலி மான தம்பநற்
கோபுரங் கொடிநின்ற தோர ணமிவை
வாபிமா நந்தையை யெய்த வந்தவே.
(இ-ள்.) தூபை - ஸ்தூபையும்,
சேதியமரம், சைத்யவிருட்சமும்,
வைசயந்தையாம் - வைஜயந்தை யென்னும் பெயரையுடையதாகிய,
மாபெருங்கொடி - சிறந்த பெரிதாகிய இந்திரத்துவஜமும்,
மலி -
அளவுபோல் நிறைந்திராநின்ற, மானதம்பம் - மானஸ்தம்பமும், நல் -
நன்மையாகிய, கொடிநிறை - த்வஜங்களால் நிறைந்த, கோபுரம்
-
கோபுரமும், தோரணம் - அந்தக்கோபுர வாசல் வழிகளில் உள்ள
தோரணமும், (ஆகிய), இவை -
இவைகளெல்லாம், வாபி -
தடாகமாகிய, மா - பெருமை பொருந்திய, (கீழ்த்திசையிலுள்ள),
நந்தையை - நந்தையென்கிற தடாகத்தை, எய்த - அடையும்படி,
வந்த - அக்கோயிலுண்ணின்று மொன்றின்பி னொன்றாக வரிசையாய்
வரப்பெற்றனவாம், எ-று.
(65)
626. ஆடுமா மிசைவந்த கிரண வேகனற்
கூடமா லுறைவிடங் குறுகு மெல்லையு
ணீடியா திழிந்துபின் னிலத்தின் மேல் வராக்
கோடுநீள் கோபுரங் கடந்து கும்பிடா.
(இ-ள்.) (இவ்வாலயத்தின்
சிறப்பு இங்ஙனமிருப்ப), ஆடும் -
நர்த்தனஞ் செய்யும்படியான, மாமிசை -
குதிரையின்மேலேறிக்
கொண்டு, வந்த - வந்துள்ள, |