629. மணிநிலஞ் சந்தனங் கொண்டு மட்டியா
வணிபெற வருச்சனை விதியி னர்ச்சியா
விணையிலா விறைவனைப் பணிந்தெ ழுந்துபின்
றுணிபடு வினையவன் றுதிதொ டங்கினான்.
(இ-ள்.) (அங்ஙனம்
வணங்கி யெழுந்தபின்), மணி - அழகிய,
நிலம் - பூமியை, சந்தனங்கொண்டு -
சந்தனத்தைக்கொண்டு,
மட்டியா - மெழுகி, (அதாவது : பூசி), அணிபெற
- அழகுபெற,
அருச்சனை - அஷ்ட விதார்ச்சனையை, விதியின் - கிரமத்தின்படி,
அர்ச்சியா - அர்ச்சித்து, இணையிலா - உவமையில்லாத, இறைவனை
- ஸர்வஜ்ஞனை, பணிந்து - வணங்கி, எழுந்து - எழுந்து நின்று, பின்
- பிறகு, துணிபடு -
கெடுக்கப்படும், வினையவன் -
கர்மங்களையுடையவனாகிய அக்கிரணவேகன்,
துதி -
ஸ்தோத்திரத்தைதச் செய்வதற்கு, தொடங்கினான் - ஆரம்பித்தான்,
எ-று.
(69)
வேறு.
630. அறிவி னாலறி யாத வறிவனீ
பொறியி னால்வரும் போகியு மல்லனீ
மறுவி லாத குணத்துனை வாழ்த்துமா
றறிகி லேனடி யேனற வேந்தனே.
(இ-ள்.) (அவ்வாறு
துதிக்கத்தொடங்கிய அவன், சர்வஜ்ஞனை
நோக்கி), அறிவினால் -
ஹேதுவாகிய மதி சுருதி அவதி
மனப்பரியங்களிலும் விஷயமாகிய இந்த நான்கு
ஞானங்களால்,
அறியாத - கிரகித்தறியாத, அறிவனீ - (ஸர்வத்திரவிய
பரியாய,
யுகபத் ஸகலப்பிரத்தியக்ஷமாகிய) கேவல ஞானத்தை யுடையவனீ,
பொறியினால் - பஞ்சேந்திரியங்களினால், வரும்
- வருகின்ற,
போகியும் - போகத்தையுடையவனும், அல்லன்நீ - அல்லாதவனாகி
ஸ்வாத்மோத்த அனந்த சுகத்தையுடையவனும் நீ, அறவேந்தனே -
தர்மத்துக்கரசனாகிய சுவாமியே!, மறுவிலாத -
களங்கமில்லாத,
குணத்து - குணத்தையுடைய, உனை - உன்னை, வாழ்த்துமாறு -
ஸ்துதிக்கும்படியான விதத்தை, அடியேன் - அடியேனாகிய யான்,
அறிகிலேன் - தெரியாதவனாயிரா நின்றேன், எ-று. (70)
631. ஒன்றி யாவையு முண்மையி னாலெனா
வொன்ற லாமையு முண்மையு மோதினா
யொன்றி டாதன போலுநின் வாய்மொழி
யொன்றி டாவினை யோடுழல் வாருளம்.
(இ-ள்.) யாவையும்
- ஜீவாதி திரவியங்கள் யாவையும்,
உண்மையினால் - அதனதன் தத்பாவமாகிய தன்மையினால்
(அதாவது : திரவ்வியார்த்திக நிச்சய நயா |