290மேருமந்தர புராணம்  


 

பேட்சையால்), ஒன்று - ஒன்றே, எனா - என்று, உண்மையும் - அதன்
தத்துவமும்,   (அவ்விதம்   திரவியார்த்திக   நயத்தால்   ஒன்றாகிய
அப்பொருளே),    ஒன்றலாமையும்   -   பரியாயார்த்திக வியவஹார
நாயாபேட்சையால்)    ஒன்றல்லாமல்    பலவாயிருககும்  தன்மையும்,
ஓதினாய்   -    நீ    சொல்லினாய்,   நின்வாய்மொழி   -  உனது
திவ்யத்துவனியாகிய    பரமாகம   மொழிகள்,  ஒன்றிடா  -  ஆத்ம
குணத்திற்கு  வேறாகிப் பலவிதமாகிய, வினையோடு - கர்மங்களுடன்,
உழல்வார் -  சுழல்பவரது, உளம் - மனதுக்கு, ஒன்றிடாதனபோலும் -
பொருந்தாதவைகள்போலும், எ-று.

     இவ்வாறு    கூறியதனால்   அவர்கள்  நின்வாய்   மொழியின்
உண்மையை உணரமாட்டார்கள் என்பது பெறப்படும            (71)

 632. நித்த மாம்பொருள் நின்ற குணத்தெனா
     நித்த முமல நின்ற குணத்தெனா
     நித்த மொன்றி நிலாதநின் வாய்மொழி
     நித்த மும்நினை வார்வினை நீங்குமே.

     (இ-ள்.)   பொருள்   -  ஜீவாதிதிரவியங்கள், நின்ற குணத்து -
நிச்சய    குணமாகிய    தத்பாவ   ஸ்வபிரத்தியய   திரவியார்த்திக
நயாபேட்சையால்,  நித்தமாம்  - நித்யமாகும், எனா - என்றும், நின்ற
- பரப்பிரத்தியத்தினால்   கூடி   நின்ற,   குணத்து   -  வியவஹார
பரியாயார்த்திக           நயாபேட்சையால்,          நித்தமுமல -
அனித்யஸ்வரூபமுமாகும்,   எனா - என்றும், (சொன்னாய் ; இவ்வாறு
சொல்லி),   நித்தம்   நித்திய   ஸ்வரூபமாகிய  தன்மையொன்றையே,
ஒன்றி  -  பொருந்தி,   நில்லாத  -  நிலை  நில்லாமல் ஸ்யாதனித்ய
ஸ்வரூபத்தையுமுடைய,   நின்    -   உன்னுடைய,    வாய்மொழி -
பரமாகமமாகிய   வசனத்தை,   நித்தமும் - நாடோறும், நினைவார் -
தியானிப்பவர்கள், வினை - கருமம், நீங்கும் - விலகும், எ-று.    (72)

 633. அலகி லாவறி வின்கண் ணடங்கிவந்
     துலகெ லாமுள் ளடங்கிய வுன்னையென்
     மலமி லாத மனத்திடை வைத்தபின்
     னலகி லாமைய தென்கண தாயதே.

     (இ-ள்.)   அலகிலா   -   அளவில்லாத (அதாவது : அனந்த),
அறிவின்கண் - கேவல  ஞானத்தினிடமாக, அடங்கி வந்து - சேர்ந்து
வந்து,   உலகெலாம் - லோக  முழுமையும்,   உள் -  உனக்குள்ளே,
அடங்கிய    -    அடங்கப்பட்ட    (அதாவது :    ஸர்வர்த்திரவிய
பரியாயங்களை   யுகபத்   உணர்ந்த),   உன்னை - உன்னை, என் -
என்னுடைய,   மலமிலாத  -  களங்கமில்லாத, மனத்திடை - மனதில்,
வைத்த   பின்  -  ஸ்தாபித்த  பிறகு, (அதாவது : உனது திரவியகுண
பரியாயங்களை யறிந்த பின்), அலகிலா