மையது - முடிவில்லாத உனது ஸ்வரூபமானது,
என்கணதாயது -
என்னிடத்திலு முண்டென் றுணரப்பெற்றது, எ-று. (73)
634. வேரி யார்மலர் மீதுசெல் போதுபூ
மாரி யாய்மூ வுலோக மெடுக்குமா
வீரி யாவடி யேன்வினை தீரநல்
வாரி யாவரு ளாயற வேந்தனே.
(இ-ள்.) அறவேந்தனே -
தர்மசக்ரத் தலைவனாகிய ஸ்வாமியே!,
வேரி - வாசனையால், ஆர் - நிறைந்த, மலர்மீது
- தேவநிர்மித
சோணாம்புஜத்தின் மேல், செல்போது - நீ செல்கின்ற
ஸ்ரீவிஹார
காலத்தில், பூமாரியாய் - தேவர்களால் பொழியப்பட்ட
புஷ்ப
வருஷத்தை யுடையவனே!, மூவுலோகம் - இம்மூன்றுலகத்தையும்,
எடுக்கும் - ஞானத்தில் தரித்தேந்தும், மா - பெருமை பொருந்திய,
வீரியா - அனந்த வீரியத்தை யுடையவனே!, நல் - நன்மையாகிய,
ஆரியா - குணங்களால் நிறைந்தவனே!, அடியேன் - அடியேனுடைய,
வினைதீர - கரும நீங்கும்படியாக, அருளாய் - அருளுவாயாக, எ-று.
இங்ஙன முரைத்ததால்
உனது பக்தியே எனக்காகக்கடவ
தென்பதும், அதனால் வினை நீங்குமென்பதும் பெறப்படும். (74)
635. மாரி மொக்குகளின் மாய்ந்து பிறந்துமாற்
றார ணத்திலென் னாழ்துயர் போயதன்
பார மாயவுன் பாத மடைந்தபின்
வாரி வீழ்ந்தவன் மால்கரை சேர்ந்தவாம்.
(இ-ள்.) மாரி
- மழையினாலாகிய, மொக்குகளின்
-
நீர்க்குமிழிபோல, மாய்ந்து - நீங்கியும், பிறந்து - உண்டாகியும், மாற்று
- ஸம்சாரமாகிய, 1ஆரணத்தில் - காட்டில்,
(ஏற்பட்ட), என் - எனது,
ஆழ்துயர் - ஆழ்ந்த துக்கமானது, அன்புஆர் - அன்பு பொருந்திய,
அம்ஆய - அழகும் பரிசுத்தமுமுள்ள, உன் -
உனது, பாதம் -
பாதங்களை, அடைந்தபின் - அடைந்த பிறகு, போயது - நீங்கியது,
(அவ்வாறு நீங்கியதானது), வாரி - சமுத்திரத்தில்,
வீழ்ந்தவன் -
வீழ்ந்து மூழ்கியவன், மால் - பெரிதாகிய, கரை - அதன் கரையில்,
சேர்ந்த - அடைந்ததன்மை, ஆம் - ஆகும், எ-று. (75)
636. பொங்கு சாய்மரை பூமழை மண்டிலஞ்
சிங்க மேந்தணை பிண்டி செழுங்குடை
____________________________________________
1.ஆரண்யத்தில்
என்பது ஆரணத்தில் என்று எதுகைபற்றிச்
செய்யுளில் வந்தது. |