யங்க பூவம தாமொழி துந்துபி
யெங்க டீவினை தீர விளங்குமே.
(இ-ள்.) பொங்கு
- பெரிதாகிய, சாய்மரை - சாமரைகளும்,
பூமழை - புஷ்பவருஷமும், மண்டிலம் -
பிரபாமண்டலமும்,
சிங்கமேந்தணை - சிம்மத்தினால் தாங்கப்பட்ட
சிம்மாசனமும்,
பிண்டி - அசோக விருட்சமும், செழும் - செழுமை பொருந்திய,
குடை - முக்குடையும், அங்கபூவமதாம் - அங்காகமம் பூர்வாகமம்
ஆகிய, மொழி - திவ்வியத்துவனியும்,
துந்துபி - தேவ
வாத்தியங்களும், (ஆகிய இந்த அஷ்ட மஹாப்ராதிஹார்யங்கள்),
எங்கள் - (தரிசிக்கின்ற) எங்களுடைய, தீவினை - பாப வினைகள்,
தீர - நீங்கும்படியாக, விளங்கும் - நின்னிடத்தே விளங்குகின்றன,
(என்று ஸ்தோத்திரம் பண்ணினான்), எ-று. (76)
வேறு.
637. விலங்கர சனையவக் காளை வீரனை
யிலங்கிநின் றடிபணிந் தேத்தி யிவ்வகை
வலங்கொண்டு முனியரிச் சந்தி ரன்னவ
னலங்கலஞ் சேவடி முடியிற் றீட்டினான்.
(இ-ள்.) விலங்கரசனைய
- மிருகராஜனாகிய சிம்மம்போன்ற
பாராக்கிரமத்தை யுடைய, அக்காளை - அக்குமரனாகிய கிரணவேக
மகாராஜன், வீரனை - அனந்த வீரியத்தையுடைய
ஸர்வஜ்ஞப்
பிரதிமையை, இவ்வகை - இந்தப்பிரகாரம்,
இலங்கிநின்று -
குணங்களால் விளங்கி நின்று, ஏத்தி -
ஸ்தோத்திரம் பண்ணி,
வலங்கொண்டு - மறுபடியும் ஆலயத்தைப் பிரதக்ஷிணஞ்செய்து,
முனியரிச்சந்திரனவன் - (ஆலயப் பிராகாரத்துள்
ளிராநின்ற)
அரிச்சந்திரனென்னும் பெயருள்ள முனிவரனுடைய,
சேவடி -
அழகிய திருவடிகளை, அலங்கல் - மாலைகளையணிந்த, அம் -
அழகிய, முடியில் - கிரீடத்தையுடைய சிரசில்,
தீட்டினான் -
சேர்த்தி வணங்கினான், எ-று.
(77)
638. அருந்தவ னரசனே குசல மோவெனத்
திருந்திய குணத்தினா னிறைஞ்சிச் சீயவென்
றிருந்தவ னெழுந்துமாற் றகத்தும் வீட்டினும்
பொருந்துகா ரணமருள் போற்றி யென்றனன்.
(இ-ள்.) (அவ்வாறு
வணங்கிய மாத்திரத்தில்) அருந்தவன் -
அரிதாகிய தபத்தையுடைய அம்முனிவன், (அக்கிரணவேகனை
நோக்கி), அரசனே - ராஜனே!,
சீயவென்று - ஜீயாத் என்று
(அதாவது : ஜெயிக்கக் கடவாயென்று ஆசீர்வாதஞ்செய்து),
குசலமோவென - க்ஷேமந்தானோ வென்று கேட்க,
திருந்திய -
திருத்த |