மாகிய, (அதாவது : ஸம்ஸார விராகத்தை யடைந்த),
குணத்தினான் -
குணத்தையுடைய கிரணவேகராஜன், இறைஞ்சி - மறுபடியும் அம்
முனிவனை வணங்கி, இருந்தவன் - அவரனுமதிப்படி இருந்தவனாய்,
எழுந்து - பின்னர் எழுந்து நின்று,
மாற்றகத்தும் - இந்தச்
சம்சாரத்திலும், வீட்டினும் -
மோக்ஷத்தும், பொருந்தும் -
சேரும்படியான, காரணம் - ஸம்ஸார மோக்ஷ காரணங்களை, அருள்
- உபதேசித்தருள்க, போற்றி - நினக்கு நமஸ்காரம்,
என்றனன் -
என்று வினவினான், எ-று. (78)
639. இந்துவி னெழிலோடொத் திலங்கு பாறைமே
னின்றபிண் டியினிழ லிருந்தச் சாரணன்
மன்றலர் முடியினாய் மாற்றும் வீட்டுமாஞ்
சென்றதத் துவந்தெளி யாமை தேறலால்.
(இ-ள்.) (அவ்வாறு
கேட்டபோது) நின்ற - அக்கோயிலுட்
பிராகாரத்தில் நின்ற, பிண்டியினிழல் -
அசோக விருக்ஷத்தினது
நிழலில், இந்துவினெழிலோடொத்து -
சந்திர கிரணத்தின்
அழகுக்கொப்பாகி, இலங்கும் -
விளங்கும், பாறைமேல் -
சந்திரகாந்தச் சிலையின்மேல்,
இருந்து - உட்கார்ந்திருந்து,
அச்சாரணன் - சாரண பரமேஷ்டியாகிய வந்த
அரிச்சந்திர
முனிவன், (கிரணவேகனை நோக்கி), மன்றலர் - வாசனையோடு
மலர்ந்த புஷ்பமாலையணிந்த, முடியினாய் -
முடியையுடைய
வரசனே, சென்ற - இவ்வுலகத்தில் நடந்த, தத்துவம்
- ஜீவாதி
தத்துவங்களை, தெளியாமையால் -
அறியாமையாகிய
அஞ்ஞானத்தால் (ஏற்படும்) மித்தியாத்துவத்தால்,
மாற்றும் -
சம்சாரத்திலும், தேறலால் -
தெளிதலாகிய ஸம்மியக்துவ
ஞானத்தால், வீட்டும் - மோக்ஷத்திலும்,
ஆம் - சேர்க்கை
ஆகும், எ-று. (79)
வேறு.
640. அத்தி நித்த மனித்த மவாச்சிய
மொத்த வேற்றுமை யொற்றுமை சூனியந்
தத்து வம்மிவை யொன்றிய தன்மையால்
மித்த மாறும்வே றேயென வேண்டினால்.
(இ-ள்.) அத்தி
- அஸ்திஸ்வரூபத்தையுடைய, நித்தம் -
நித்யமும், அனித்தம் - அனித்யமும், அவாச்சியம் - அவாச்சியமும்,
ஒத்த - பொருந்திய, வேற்றுமை -
பின்னமும், ஒற்றுமை -
அபின்னமும், சூனியம் - சூன்யமுமாகிய, இவை - இவைகளாறும்,
ஒன்றிய தன்மையால் - ஒருபொருட் டன்மையால்
(அதாவது :
பொருந்திய தன்மையால், ஸ்யாத்நித்யம்
ஸ்யாதநித்யமென்று
பாவிப்பதால்), தத்துவம் - தத்துவமாகும், (அதாவது : ஸ்வரூபமாகும்
அல்லது நிச்சயமாகும் யாதாத்மியமாகும்),
ஆறும் -
இவைகளாறையும் வேறேயென வேண்டினால் - வேறு வேறாக,
(நித்தியமேவ தத்துவம், அனித்யமேவ தத்துவம், அவாச்யமேவ தத்து |